கண்டித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
சென்னை, ஜன. 7- தேசிய குடியுரிமை திருத்தச் சட் டத்தை (சிஏஏ) திரும்பப் பெற வலி யுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி திமுக, காங்கிரஸ், இந்திய முஸ்லீக் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்க ளும், தமிமுன் அன்சாரி, கருணாஸ் உள்ளிட்டோரும் வெளிநடப்பு செய்த னர். தமிழக சட்டப்பேரவையில் ஆளு நர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவா தத்தின் போது திருத்தப்பட்ட குடி யுரிமை சட்டம் தொடர்பாக திமுக, அதிமுக இடையே கடும் வாக்கு வாதம் நடைபெற்றது.
செவ்வாயன்று (ஜன. 7) காலை பேரவையில் கேள்வி நேரம் முடிந்த வுடன் அப்போது எதிர்க்கட்சித் தலை வர் மு.க.ஸ்டாலின் குடியுரிமை திருத் தச் சட்டம் தொடர்பாக ஒரு கோரிக் கையை எழுப்பினார். மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடி யுரிமை திருத்தச் சட்டம் நாட்டின் ஒரு மைப்பாட்டிற்கு உகந்தது அல்ல. இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறை வேற்றக்கோரி கடிதம் கொடுத்துள் ளேன். இதனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்து பேசிய பேர வைத்தலைவர் தனபால், குடி யுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மா னம் நிறைவேற்றக்கோரி நீங்கள் கொடுத்த மனு ஆய்வில் உள்ளது. அது தொடர்பாக ஆராய்ந்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும். எனவே அதுகுறித்து பேச வேண் டாம், ஆளுநர் உரை மீது மட்டும் பேசுங் கள் என்றார். இதையடுத்து திமுக உறுப்பினர்கள் மு.க.ஸ்டாலின் தலை மையில் வெளிநடப்பு செய்தனர். பின்னர் இதுகுறித்து மு.க.ஸ்டா லின் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக 2ஆம் தேதி சட்டப் பேரவை தலைவ ருக்கு கடிதம் அனுப்பி இருந்தேன். இதுகுறித்து இன்று நாங்கள் பேரவையில் கேட்டோம். ஆனால் சபாநாயகர் ஏற்கவில்லை. நாடு முழுவதும் பேரணி, போராட்டம் நடை பெற்று வருகிறது. துப்பாக்கி சூடு நடந் துள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தீப்பற்றி எரிகிறது. இந்த பிரச்சனை குறித்து இன்று கேள்வி எழுப்பினேன். 9ஆம் தேதி பேரவை முடிய இருக்கிறது. எனவே இதனை உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். பல மாநில முதல்வர் கள் இதை கடுமையாக எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் கூட எதிர்ப்பு தெரி வித்துள்ளனர். ஆதரித்து வாக்க ளித்த ஒரிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் கூட அமல்படுத்த மாட்டோம் என தெரிவித்துள்ளார். அதே போல் ஆந்திர முதல்வர், ஒடிசா முதல்வர் கள் எங்கள் மாநிலத்தில் அனுமதிக்க மாட்டோம் எனக் கூறியுள்ளனர். ஆனால் அதிமுக ஆதரவு தெரி வித்துள்ளது. அதிமுக அரசு பாஜக வின் அடிமையாக சேவகம் மட்டுமே செய்கிறது. எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் வெளி நடப்பு செய்துள்ளோம். புதனன்று (ஜன. 8) நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு திமுக ஆதரவு என ஏற்கனவே அறிவித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
முற்றுப்புள்ளி வைக்கும் வரை....
காங்கிரஸ் எதிர்கட்சித் தலைவர் ராமசாமி கூறுகையில்தேசிய குடி யுரிமை திருத்த சட்டம் குறித்து தமிழக அரசின் நிலை என்ன என்பதை தெளிவு படுத்த வேண்டும். இதுகுறித்து தீர்மா னம் நிறைவேற்றக் கோரியுள்ளோம். அதை தட்டிக் கழிக்கும் வகையில் சபாநாயகர் அதுகுறித்து எங்களுக்கு பேச அனுமதி அளிக்க மறுக்கிறார். பல மாநில முதல்வர்கள் இதை நிறைவேற்ற மாட்டோம் என அறி வித்துள்ளார்கள். அதுபோல் தமிழக அரசும் அறிவிக்க வேண்டும் என்றார். ஒரு பிரிவினரை இந்த நாட்டில் இருந்து வெளியேற்ற அதிமுக துணை போகிறதா என்பதை கூற வேண்டும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை குரல் கொடுத்துக் கொண்டிருப்போம் என்றார்.
நிலைப்பாட்டை தெளிவுபடுத்துக!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் கூறு கையில் நாடு முழுவதும் எதிர்ப்பு அலை வீசிவரும் குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் பற்றி பேச அனு மதி கேட்டோம். ஆனால் அது ஆய்வில் இருப்பதால் தற்போது அது குறித்து பேச வேண்டாம் என சபா நாயகர் எங்களை பேச அனுமதிக்க வில்லை. முன்னாள் முதல்வர் ஜெய லலிதா பாஜகவை கடுமையாக எதிர்த்தார் ஆனால் தற்போதைய அதி முக அரசு ஜெயலலிதாவின் நிலைப் பாட்டை மறந்து பாஜகவிற்கு துணை போகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் இந்த சட்டத்தை எதிர்த்து வரும் நிலையில் அதிமுக தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். இந்த சட்டத்தை முழுமை யாக திரும்பப் பெறும் வரை எங்க ளது போராட்டம் ஓயாது என்றார்.
தீர்மானம் நிறைவேற்றுக!
சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி கூறுகையில், பாஜக அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடி யுரிமை திருத்தச் சட்டத்தை பல மாநில முதல்வர்கள் எதிர்த்துள்ளனர். கேரள முதல்வர் சட்டமன்றத்தில் அமல்ப டுத்த மாட்டோம் என தீர்மானம் நிறை வேற்றியுள்ளார். அதுபோல் தமிழக அரசும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.