tamilnadu

img

சவுகிதார் என்று அடைமொழி போடுவதா பாஜக மீது புகார் அளித்த நாட்டின் மூத்த வாக்காளர்

சிம்லா, ஏப்.1- நாட்டின் மூத்த வாக்காளராக விளங்குபவர் ஷியாம் சரண் நேகி. இமாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவருக்கு 102 வயதாகிறது. அரசுப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற நேகி, தற்போதுவரை தெளிவான கண் பார்வையுடனும், கேட்கும் திறனுடனும் இருந்துவருகிறார். 1951-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல்முதல் அனைத்துத் தேர்தல்களிலும் வாக்களித்துள்ள நேகி, கடந்த 2010-ஆம்ஆண்டு தேர்தல் ஆணையத் தின் விளம்பரத் தூதராகவே நியமிக்கப்பட்டார். தேர்தல் ஆணையத்தின் வைரவிழா நிகழ்ச்சியையொட்டி, அப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா,கல்பா கிராமத்திற்கே நேரடியாகச் சென்று நேகியைக் கவுரவித்தார். இந்நிலையில்தான், ஷியாம் சரண் நேகியின் அனுமதியைப் பெறாமலேயே, அவரது பெயருக்கு முன்னால் ‘சவுகிதார்’ என்று போட்டு,பாஜகவினர் வம்பு இழுத்துள்ளனர். இமாச்சலப்பிரதேசத்தில் ஆட்சியில் இருக் கும் அதிகார மமதையில் பாஜகவினர் இதனைச் செய் துள்ளனர்.ஆனால், தனது பெயருக்கு முன்னால், ‘சவுகிதார்’ என்ற வார்த்தையைச் சேர்ப்பதற்கு பாஜகவினருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? என்று ஆவேசமடைந்துள்ள நேகி, பாஜகவினரின் அடாவடி குறித்து, தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். பாஜகவினருக்கு தனது கண்டனத்தையும் அவர் பதிவுசெய்துள்ளார்.