tamilnadu

img

குஜராத் பாஜக எம்எல்ஏ பதவி பறிப்பு

அகமதாபாத், ஏப்.13-குஜராத் மாநிலம் துவாரகா சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் பாபுபா மானக்.ஆனால், பாபுபா மானக்வேட்புமனுவில் தவறான தகவல் அளித்திருப்பதால், அவரது வெற்றியை ரத்து செய்யவேண்டும் என்று காங்கிரஸ் வேட்பாளர் மீராமன்ஆகிர், வழக்கு தொடர்ந் தார். இதனை விசாரித்து வந்த குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பரேஷ் உபாத்யாயா, மானக் வேட்புமனுவில் குறைபாடுகள் இருப்பது உறுதிசெய்யப்பட்டு இருப்பதாகவும், எனவே அவரதுவெற்றி செல்லாது என்றும் தீர்ப்பளித்துள்ளார்