tamilnadu

img

குஜராத்தில்  219 குழந்தைகள் மரணம்

காந்திநகர்,ஜன.5- குஜராத் மாநிலம் ராஜ்கோட் மற்றும் அகமதாபாத் அரசு மருத்துவமனைகளில்  கடந்த ஒரு மாதத்தில் 219 பச்சிளம் குழந்தை கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அரசு மருத்துவமனையில் ஒரு மாதத்தில் 107 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் ராஜ்கோட் அரசு மருத்துவமனையில் 134 பச்சிளம் குழந்தைகளும், அகமதாபாத் அரசு மருத்துவமனையில் 85 பச்சிளம் குழந்தைகளும் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜ்கோட் மருத்துவ மனையில் 2019 ஆம் ஆண்டில் மட்டும் 1235 குழந்தைகள் பலி யானதாக கூறப்படுகிறது. இது குறித்து முதலமைச்சர் விஜய் ரூபானியிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். ஆனால் அவர் பதிலளிக்காமல் நழு விச்சென்றார்.குஜராத்தில்  219 குழந்தைகள் மரணம் காந்திநகர்,ஜன.5- குஜராத் மாநிலம் ராஜ்கோட் மற்றும் அகமதாபாத் அரசு மருத்துவமனைகளில்  கடந்த ஒரு மாதத்தில் 219 பச்சிளம் குழந்தை கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அரசு மருத்துவமனையில் ஒரு மாதத்தில் 107 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் ராஜ்கோட் அரசு மருத்துவமனையில் 134 பச்சிளம் குழந்தைகளும், அகமதாபாத் அரசு மருத்துவமனையில் 85 பச்சிளம் குழந்தைகளும் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜ்கோட் மருத்துவ மனையில் 2019 ஆம் ஆண்டில் மட்டும் 1235 குழந்தைகள் பலி யானதாக கூறப்படுகிறது. இது குறித்து முதலமைச்சர் விஜய் ரூபானியிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். ஆனால் அவர் பதிலளிக்காமல் நழு விச்சென்றார்.