ஈரோடு, ஏப். 14-ஈரோடு நாடாளுமன்ற வேட்பாளர் அ.கணேசமூர்த்தியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இருசக்கர வாகன பிரசாரம் ஞாயிறன்று ஈரோடு, சம்பத் நகர் பகுதியில் நடைபெற்றது. ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாநகராட்சி பகுதிக்குட்பட்ட சம்பத் நகர், ஜான்சி நகர், வீரப்பன்சத்திரம், அசோகபுரம், அய்யங்காடு, சூளை, மாணிக்கம் பாளையம், சங்குநகர், சூரம்பட்டி வலசு, சூரம்பட்டி பேருந்து நிறுத்தம் போன்ற பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் நடைபெற்றது.இந்த வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்திற்கு ஈரோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் பி.சுந்தரராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ப.மாரிமுத்து, எஸ்.சுப்பிரமணியன், சி.பரமசிவம் உள்ளிட்ட திரளான மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.