ஈரோடு, அக்.22- பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதா னத்தை பாதுகாக்க வேண் டும் என வலியுறுத்தி வாலி பர், மாணவர் சங்கத்தின் சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக் கப்பட்டது. ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளயில் உள்ள விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியை அருகில் உள்ள கோவிலுக்கு நிலை மாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள் ளார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், பள்ளி விளையாட்டு மைதா னத்தை பாதுகாக்க வேண்டும் என வலியு றுத்தியும் திங்களன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இம்மனுவினை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.ஏ.விஸ்வநாதன், மாவட்ட செயலாளர் எம்.சசி, பெருந்துறை தாலுகா செயலா ளர் சி.அஜித்குமார், இந்திய மாணவர் சங்க பெருந்துறை தாலுகா செயலாளர் சி. நவீன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி. லலிதா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாவட்ட துணைச் செயலாளர் நா. பாலசுப்பிரமணி உள்ளிட்டோர் அளித் தனர்.