ஈரோடு, பிப். 8- ஈரோட்டில் குடியுரிமை திருத் தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதி வேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளை கண் டித்து ஜமாஅத்துல் உலமா சபை ஒருங்கிணைப்பில் மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து அமைப்புகள் சார்பில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக் கெடுப்பு ஆகிய மக்கள் விரோத நட வடிக்கைகளை கண்டித்து ஈரோட் டில் ஜமாஅத்துல் உலமா சபை ஒருங்கிணைப்பில் மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து அமைப்புகள் சார்பில் கண்டன பேரணி மற்றும் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஜமாஅத்துல் உலமா சபையின் மாநில ஆலோச கர் மௌலான உமர் ஃபாரூக் தாவூதி தலைமை வகித்தார்.முன்னதாக ஈரோடு ஃபிரஃப் சாலையில் துவங்கிய பேரணியா னது, வஉசி பூங்காவில் நிறைவ டைந்தது. இறுதியில் வஉசி பூங்கா மைதானத்தில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங் கிரஸ் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர், ஜி.ராஜன் வர வேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட இந்திய சமூக ஜனநாயக் கட்சியின் மாநில பொருளாளர் வி.எம். அபுதாஹிர் மற்றும் தமுமுக மாநில செயலாளர் கோவை சாதிக் மற்றும் மஜக மாநில செயலாளர் சையது அஹ மது ஃபாரூக் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். இப்போராட்டத்தில் ஜமாஅத் துல் உலமா சபையின் மாவட்ட செயலாளர் பைஜுர்ரஹ்மான் பாக்கவி, திமுக மாநகர செயலா ளர் சுப்பிரமணியம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரகு மார், விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் மண்டல செயலாளர் விநாயக மூர்த்தி, தந்தை பெரியார் திராவி டர் கழகத்தின் மாவட்டச் செயலா ளர் குமர குருபரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ரகுராமன், சிறு பான்மை மக்கள் நலக்குழுவின் பொறுப்பாளர் மாரிமுத்து மற்றும் ஜமா அத்துல் உலமா சபையின் மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநா யக இயக்கங்களின் பொறுப்பா ளர்கள் உள்ளிட்ட அனைத்து சமு தாய பொதுமக்கள் பல்லாயிரக்க ணக்கானோர் கலந்து கொண்ட னர்.