tamilnadu

img

இடிந்து விழும் நிலையிலுள்ள சுற்றுச்சுவரை அகற்ற கோரிக்கை

 கோபிசெட்டிபாளையம், செப்.23-  கோபிசெட்டிபாளையம் கபிலர் வீதியில் ஆபத் தான நிலையிலுள்ள சுற்றுச்சுவரை அகற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நக ராட்சிக்குட்பட்ட கபிலர் வீதி சாலையானது சரவணா திரையரங்கு சாலை – மேட்டுவலவு இணைப்புச் சாலையாக அமைந்துள்ளதால் இச்சாலை வழி யாக நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பொது மக்கள் சென்று வருகின்றனர். மேலும் கபிலர் வீதி யின் அருகில் உள்ள நகரவை ஆண்கள் மேல் நிலைப்பள்ளிக்கும், முருகன்புதூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் சென்று வர இச்சாலையைதான் மாணவ, மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர்.  இந்நிலையில் இச்சாலையில் தனியாருக்கு சொந்தமான சுற்றுச்சுவர் கட்டிடம் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து சாலையில் விழும் அபாயம் உள்ளது. ஆகவே பேராபத்து நிகழும் முன்பு சுற்றுச் சுவரை இடித்து அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.