கோபி, ஜூன் 25- 1 முதல் 12 ஆம் வகுப்புவரை அடுத்த கல்வியாண்டிற்கான பாடப்புத்தங்கள் ஜூன் 30 ஆம் தேதிகளுக்குள் ஒவ் வொரு பள்ளிகளுக்கும் வழங்க ஏற் பாடு செய்யப்பட்டுள்ளதென தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித் துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் பேருந்து நிலையத்தில் ரோட்டரி சங்கத்தின் சார்பில் ரூ.3.75 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக் கப்பட்ட மணிக்கூண்டை தமிழக பள் ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திறந்து வைத் தார். அதனைதொடர்ந்து செய்தியா ளர்களை சந்தித்த அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறுகையில், தமிழக முதல்வரின் ஆலோசனைப் படி அரசு மற்றும் அரசு உதவிபெ றும் பள்ளிகளுக்கு 1 முதல் 12 ஆம் வகுப்புவரை அடுத்த கல்வியாண்டிற் கான பாடப்புத்தங்கள் ஒவ்வொரு பள் ளிகளுக்கும் வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. வரும் ஜூன் 30 ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் கொண்டு வந்து சேர்க்கப்படும். இதை யடுத்து அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் மூலம் புத்தகங்கள் விநி யோகம் செய்யப்படும் என்றார். மேலும், முதல்வரின் ஆணைப்படி அமைக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்து றைப்படி இந்தாண்டு நாட்கள் குறை வாக உள்ளதால் பக்கங்கள் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.