வந்த அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டு, சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். வேறு பல சேவைகள் மற்றும் குறைகளைத் தெரிவிக்க வந்த பொதுமக்களிடம், இன்று ஆட்சியர் அலுவல கம் செயல்படாது நாளை வாருங்கள் என அனைவரையும் காவல்துறையினர் திருப்பி அனுப்பி அராஜகத்தில் ஈடுபட்டனர்.
வி.சுப்பிரமணியன் கண்டனம்
உயர்மின் அழுத்த கோபுர எதிர்ப்பு போராட்டத்தில் காவல்துறை அராஜகம் அரங்கேற்றப்பட்டதை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் வி.சுப்பிரமணியன் கண்டித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயர்மின் அழுத்த கோபுரங்களை விளை நிலங்களில் அமைப்பதை கைவிடவும், அமைக்கப்பட்ட இடத்திற்கு உரிய வாடகை வழங்கிடவும், மாற்றுப் பாதையில் (சாலையோரங்களில்) கேபிள் மூலமாக கொண்டு செல்லவும் வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், உயர்மின் அழுத்த கோபுர எதிர்ப்பு கூட்டமைப்பும் ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்தின.இதில் பங்கேற்ற தலை வர்கள் மற்றும் விவசாயிகளை அராஜகமான முறையில் கைது செய்துள்ள ஈரோடு காவல்துறையையும், தமிழக அரசையும் வன்மையாக கண்டிக்கிறோம். மத்திய, மாநில அரசுகள் உயர்மின் அழுத்த கோபுர பிரச்சனையில் உரிய முறையில் தலையிட்டு பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது புனையப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். ஜனநாயக முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது அடக்குமுறையை கையாண்ட ஈரோடு காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், உயர் மின் அழுத்த கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், 8 வழிச்சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இணைந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வியாழனன்று (ஜூலை 18) தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் டி. ரவீந்திரன் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்டச்செயலாளர் வி.சுப்பிரமணி, தலைவர் டி.கே.வெங்க டேசன், நிர்வாகிகள் கே.கே.வெங்கடேசன், அழகேசன், ஏ.வி.ஸ்டாலின்மணி, உதய குமார், ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் எஸ்.அபிராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், நிர்வாகிகள் எம்.வீரபத்திரன், பி.செல்வன், எம்.ரவி, காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.