ஈரோடு,ஜன 8- ஈரோடு மாவட்டம் முழுவதும் அகில இந்திய பொது வேலை நிறுத் தத்தையொட்டி பல இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட் டங்கள் நடைபெற்றது. ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகு தியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் ஏஐடியுசி மாநிலச்செய லாளர் எஸ்.சின்னசாமி,சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் ஆர்.ரகு ராமன், எல்பிஎப் மாவட்ட செயலா ளர் ஜோ.சுந்தரம், ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் வி.ஜெகநாதன், எம்எச்எஸ் மாவட்ட செயலாளர் பி.சண்முகம், எம்எல்எப் மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.காளியப்பன், ஏஐபிஆர்ஏ நிர்வாகி ஆர்.நரசிம்மன், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க நிர் வாகி பரமேஸ்வரன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கடம்பூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகி பி.சடையப்பன் தலைமை வகித்தார். சிபிஎம் மலைக்கமிட்டி செயலாளர் சி.துரைசாமி, கமிட்டி உறுப்பினர்கள் எம்.சடையலிங்கம், சி.ராசப்பன், பழனியம்மாள், தாயிலம்மாள், ஜே.கா ளான் ஆகியோர் உட்பட திரளானோர் பங்கேற்று கைதாகினர். அந்தியூர் பகுதியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துசாமி, விவசாயத் தொழிலா ளர்கள் சங்க நிர்வாகி எஸ்.வி.மாரி முத்து, விவசாயிகள் சங்கத்தின் நிர் வாகி பி.ஆனந்தன், தாலுகா நிர்வாகி கள் கே.குப்புசாமி, மாரியப்பன், பி.சாவுத்திரி ஆகியோர் உட்பட பலர் பங்கேற்று கைதாகினார். நசியனூர் பகுதியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிபிஎம் தாலுகா செயலாளர் எம்.நாச்சிமுத்து தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனி சாமி, மாதர் சங்கத்தின் மாவட்ட தலை வர் பி.லலிதா, வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.விசுவநாதன், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் முத்து.பழனிச்சாமி, பாலசுப்பிரமணி, ஜனாதிபதி, என்.பழனிச்சாமி, இளங்கோ, கலாமணி, நாகராஜன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இதேபோல் பவானி பகுதியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் விவசாயத்தொழிலாளர்கள் சங்கத் தின் நிர்வாகி எஸ்.மாணிக்கம், விவசா யிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனுசாமி ஆகியோர் தலைமை வகித்தார். விவசாயத் தொழிலா ளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் வி.ஆர். மாணிக்கம், தம்பி, ரஜினி.குருசாமி, சத்தியமூர்த்தி, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஏ.ஐயாவும் விஜய குமார், சின்னுசாமி, வாசுதேவன், விவேகனாந்தன், மாற்றுத்திறனா ளிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.எம்.பாலு ஆகியோர் உட்பட திர ளானோர் பங்கேற்று கைதாகினர். கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சாலை மறியல் போராட்டத்தில் தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முனுசாமி மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட துணைச்செய லாளர் மாணிக்கம் தலைமை தாங்கி னர். மாவட்டக்குழு உறுப்பினர் திருத் தணிகாச்சலம், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் பாலு, கோபி தாலுகா செயலாளர் விவேகா னந்தன், பவானி தாலுகா செயலா ளர் கொளந்தசாமி, தமிழ்நாடுவிவசா யிகள் சங்கத்தின் சத்தி தாலுகா செயலாளர் வாசுதேவன் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட துணைத்தலை வர் மாணிக்கம் சத்தி ஒன்றிய செயலாளர் சத்திய மூர்த்தி உட்பட திரளானோர் பங்கேற்று கைதாகி னர்.