tamilnadu

img

கோபியில் பேருந்துகள் அனைத்திற்கும் கிருமி நாசினி தெளிப்பு கொரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாக்க ஏற்பாடு

கோபி, மார்ச் 15- கோபிசெட்டிபாளையம் அரசு  போக்குவரத்துக் கழக பணிமனை யிலிருந்து வெளியேறும் பேருந்து கள் அனைத்திற்கும் கிருமி நாசினி தெளித்து துடைத்து சுத்தம் செய்த  பிறகே பயணத்திற்கு அனுப்பப்ப டுகிறது. கொரோனா அச்சுறுத்தல் கார ணமாக பொது இடங்களில் கூட்டங் களை தவிர்க்க வேண்டும் என்றும், மற்றவர்களுக்கு கைக்கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் தமிழக அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அரசு போக்குவரத்துக் கழக பணிம னையிலிருந்து பயணிகள் பய ணத்திற்கு வெளியேற்றப்படும் அனைத்து பேருந்துகளிலும் வைரஸ் கொல்லி மருந்து தெளித்து துடைத்த பிறகே வழித்தடத்திற்கு அனுப்பப்படுகிறது. கோபிசெட்டி பாளையம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையிலிருந்து மதுரை,  தேனி, திருச்செந்தூர், கும்பகோ ணம், சென்னை, சேலம், கோவை,  திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்க ளுக்கும் கர்நாடகா, கேரளா மற்றும்  பாண்டிச்சேரி போன்ற வெளிமாநி லங்களுக்கும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில், வெளிமாவட் டங்கள் மற்றும் மாநிலப் பேருந் துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு  பாதுகாப்பு அளிக்கவும், கொரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாக்கவும் வைரஸ் கொல்லி மருந்துகள் தெளிக்கப்படுகிறது. இந்த வைரஸ் கொல்லி மருந்தை அரசு பேருந்துகளில் செல்லும் பயணிகள் கை வைக்கும் கைபிடி கள், படியில் ஏறும் பகுதிகளில்  உள்ள கம்பிகள், இருக்கைக்கம்பி கள், ஜன்னல் கம்பிகள் என அனைத்துப் பகுதிகளிலும் தெளித்து சுத்தமாகத் துடைத்த பிறகே வழித் தடத்திற்கு பேருந்துகள் அனுப் பப்பட்டு வருகிறது. இப்பணிக்காக கோபி பணிமனையில் பேருந்து களை சுத்தம் செய்வதற்கு நான்கு  பணியாட்கள் நியமிக்கப்பட்டுள் ளதாக போக்குவரத்துகழகக் கிளை மேலாளர் தெரிவித்தார்.