tamilnadu

img

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து லண்டனில் இந்திய மாணவர்கள் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு இந்திய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மோடி தலைமையிலான பாஜக அரசு இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தும் வகையில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் இஸ்லாமியர்கள் அல்லாத பிற மதத்தை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத்தை திருத்தியது. இந்த நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தது. அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், ஜாமியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தில்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து, நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு இந்திய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெரும்பாலான மாணவர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இந்த போராட்டத்தின் போது, மோடி அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.