சின்னாளப்பட்டி, மே14-காந்திகிராம நிகர்நிலை பல்கலை.யில் மதன்மோகன் மாளவியா தேசிய கல்வித் திட்டத்தின் சார்பில் “உயர்கல்வி நிறுவனங்களில் தலைமைத்துவமும் நிர்வாகமும்” என்ற தலைப்பில் தேசியக் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய காந்தி கிராம பல்கலை. துணை வேந்தர் சு.நடராஜன், உயர் கல்வி நிறுவனங்களை வழி நடத்தும் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் தெளிவான திட்டமிடலும் சக பணியாளர்களை அரவணைத்துச் செல்லும் பக்குவமும் கடமை உணர்வும் உடையவர்களாக இருக்க வேண்டும். தரமான முறையில் கல்வி கற்பித்து திறமையான மாணவர்களை உருவாக்கி உலகத் தரத்திற்கு கல்விநிறுவனங்களை மேம்படுத்த வேண்டும். சமூக விழுமியங்களை மதித்துப் போற்றும் மனநிவைலயை மாணவர்களிடம் வளாத்;தெடுக்கும் வகையில் பாடத்திட்டங்கள் கற்பித்தல் முறைகள் உருவாக்கப்படுதல் வேண்டும் என்றார். கேரள அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் எஸ்.எம் விஜயானந்த். பாரதியார் பல்கலை. முன்னாள் துணை வேந்தர் டாக்டர் சிவசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக கண்காட்சியை காஞ்சி பல்கலை. முன்னாள் துணை வேந்தர் டாக்டர் ஜெயசங்கரன் திறந்து வைத்தார் பல்கலை. பதிவாளர் பொறுப்பு டாக்டர் முரளீதரன் நன்றி கூறினார்.