திண்டுக்கல்:
கொடைக்கானலில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நட்சத்திர ஏரிக்கும் நீர்வரத்து அதிகரித்தது. மழையுடன் பலத்த காற்று வீசியதால் ஏரிச்சாலையில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. மரத்தை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அகற்றினர்.
சில தினங்களாக தொடர்ந்த மழை பெய்து வருகிறது. செவ்வாயன்று காலையிலிருந்து மாலை வரை கிட்டத்தட்ட 4.1 மில்லி மீட்டர் மழை பெய்தது. நகர மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதே போல் எலி வால் அருவி, பியர்சோழா அருவி உள்ளிட்ட பலஅருவிகளிலும் நீர் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கொடைக்கானல் செல்லும் வழியில் உள்ள மஞ்சளாறு அணை, வத்தலகுண்டு அருகேயுள்ள மருதாநதி அணை உள்ளிட்ட அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.