திண்டுக்கல், ஜுன் 13- திண்டுக்கல் மாவட்டத்தில் நலிவடைந்த நாடகக்கலைஞர்கள் 30 பேருக்கு அடைக்கல அன்னை இல்ல சகோதரிகள் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கொரானா கால நிவாரண உதவி வழங்கினர். இந்நிகழ்வில் அடைக்கல அன்னை இல்ல சகோதரிகள் குழந்தை, செல்வி, ஜோஸ்பின், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க மாவட்டச் செயலாளர் கவிஞர் சசி, கவிஞர் கள் இலமு, இரா. அசோக், திண்டுக்கல் நாடக நடிகர்கள் சங்க மாவட்டச்செயலாளர் முருகப்பா, செயலாளர் ஜோசப், ஆகியோர் பங்கேற்று 30 பேர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. (நநி)