சின்னாளபட்டி, ஜூன் 23- கொரோனா முடக்கத்தில் 60 சதவீத பயணிகளு டன் அரசுப் பேருந்துகள் இயங்கவேண்டும் என்ற உத்தரவு ஒரு வேளை அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் வாய்ப்புக்கிடைத்தால் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குப் பொருந்தலாம். மற்றபடி அரசாணை காற்றில் பறந்து பல நாட்களாகிவிட்டது. அரசுப் பேருந்துகளில் கூடுதல் பயணிகளை ஏற்றி அனுப்பும் பணியில் அதிகாரிகளே ஈடுபட்டு வருகின்றனர் என்பதே உண்மை. திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி, தவசிமடை, அஞ்சு குழிப்பட்டி, செங்குறிச்சி வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள், சிலுக்குவார்பட்டி, அழகம்பட்டி சக்கையநாயக்கனூர் செல்லும் பேருந்துகள் நேர்வழியில் இயக்கப்படு கின்றன. சித்தையன்கோட்டை செல்லும் பேருந்து சின்னாளபட்டி, நடுப்பட்டி, பட்டமலையான்கோட்டை, செம்பட்டி வழியாக ஆத்தூர் சித்தையங்கோட்டை செல்ல வேண்டும் இந்தப் பேருந்து முற்றிலும் நிறுத்தப் பட்டுள்ளது ஆத்தூர், சித் தையங்கோட்டை போடிக் காமன்வாடி செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள் ளன. நடுப்பட்டி வழித்தடத்தில் தனியார் பேருந்துகள் செல்கின்றன. தனியார்பேருந்துகள் இயங்கும் அள விற்குக் கூட அரசுப் பேருந்தை இயக்க அதிகாரிகள் மறுக்கின்றனர். போக்குவரத்துக்கழக அதிகாரி களோ, இப்போது இயங்கிக் கொண்டு இருக்கும் பேருந்தை இயக்கலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்ய ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் பணியாளர்கள், அதிகாரிகள் பேருந்தின் வருவாயை கணக்கிடுகிறார்கள். மொத்த கிலோ மீட்Lருக்கும் வரு வாய்க்கும் சரியாக வருமா என்றும் பார்க்கிறார்கள். பேருந்துகளை இயக்குவதும் நிறுத்துவதும் கணக்கு வழக்கில்தான் உள்ளது என்கின்றனர்.