தருமபுரி:
காலமுறை ஊதியம் வழங்கும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ப.சுந்தரம்மாள் தெரிவித்தார்.தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதித்துவப் பேரவைவெள்ளியன்று தருமபுரியில் துவங்கியது.இதையொட்டி சங்கத்தின் மாநிலத்தலைவர் ப.சுந்தரம்மாள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், தமிழகத்தில் கடந்த 37 ஆண்டுகளாக சத்துணவு திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அரணாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம்பல போராட்டங்களை நடத்தி கோரிக்கைகள் வென்றுள்ளது. சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் கேட்டுபல போராட்டங்களை நடத்தி வருகிறது. நிதிச்சுமையை காரணம்காட்டி காலமுறை ஊதியத்தை அமல்படுத்தாமல் தமிழகஅரசு காலம் தாழ்த்தி வருகிறது. குடும்ப ஓய்வூதியம் 2 ஆயிரம் மட்டும் வழங்கி வருகிறது. இது விலைவாசிக்கு ஏற்றார்போல் இல்லை. சமூக பாதுகாப்பான ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கவேண்டும். பணிக்கொடையாக அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையளர் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவூட்டு செலவினம் உயர்த்தி வழங்க வேண்டும்.சத்துணவு மையங்கள் மூடுவதையும், இணைப்பதையும் கைவிட வேண்டும். காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.பேட்டியின் போது மாநில பொதுச்செயலாளர் இரா.நூர்ஜஹான், மாநில துணைத்தலைவர் கே.அண்ணாதுரை, மாவட்ட தலைவர் சி.எம்.நெடுஞ்செழியன் ஆகியோர் உடனிருந்தனர்.