tamilnadu

img

கற்காலம் முதல் தாமஸ்மன்றோ காலம் வரை மாற்றத்திற்கு வித்திட்ட மண் தருமபுரி புத்தகத் திருவிழாவில் த.உதயசந்திரன் பேச்சு

தருமபுரி, ஜூலை 29- கற்காலம் முதல் தாமஸ்மன்றோ காலம் வரை மாற்றத்திற்கு வித்திட்ட மண் தருமபுரி என தருமபுரியில் நடை பெற்ற புத்தகத் திருவிழாவில் ஐஏஎஸ் அதிகாரி த.உதயசந்திரன் பேசினார். தருமபுரி மதுராபாய் சுந்தரராஜ ராவ் திருமணமண்டபத்தில் நடை பெற்று வரும்  புத்தகதிருவிழாவில் அறிவுசார் கருத்தரங்கம் நடைபெற் றது. இக்கருத்தரங்கத்திற்கு தரும புரி தமிழ்ச்சங்க தலைவர் ந.இராஜேந் திரன் தலைமை வகித்தார். ஆசிரியர்  வ.செளந்தரபாண்டியன் வரவேற்றார். புதியன விரும்பு என்ற தலைப்பில் ஐஏஎஸ் அதிகாரி த.உதயசந்திரன் பேசியதாவது, தருமபுரி மாவட்டம் பழம்பெரும் வரலாற்றுகு பெருமை கொண்ட மாவட்டம். தமிழகத்தை வழிநடத்தும் அளவுக்கு வலிமையா னது,கீழடி அகழ்வாய்வுகளில் கிமு 1650 ஆம் ஆண்டு காலமாகும். இது 7 ஆம் நூற்றாண்டில் உருவானது என கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு ஆகழ் ஆய்வில் கிடைக்கும். அனைத்து பொருட்களும் ஆதிமனிதன் பயன் படுத்தியது, வாழ்ந்த இடமாகும், பழமையை மீட்டெடுப்பது நம்மை  உயர்த்திக்கொள்வதாகும். தருமபுரி என்கிற தகடூர் பல்லாயி ரம் ஆண்டுகள் பழமையானதாகும். தருமபுரியில் கற்கால மனிதர்கள், வாழ்ந்த இடம். தாமஸ்மன்றோ தனது கனவு பாதையை துவக்கி இடம் தருமபுரி. இங்குத்தான் மன்றோ குளத்தை வெட் டினார். அவர் சொந்த ஊரான ஸ்காட் லாந்தைவிட தான் வெட்டிய குளம் சிறப்பானது அழகானது என கருதிய வர் தாமஸ்மன்றோ. பீரிட்டீஸ் அரசி டம் பணிபுரிந்த மன்றோ இந்திய மக்க ளிடம் நெருங்கி பழகினார். மக்களுக் காக அதிக சேவை செய்தார். அவர் சேலம் மாவட்டம் மேச்சேரியில் வீட் டில் தங்கி மக்களின் தனிப்பட்ட பிரச் சனைகளை தீர்த்து வைத்தார். பிரிட்டிஷ் அரசு ஆணவத்தோடு செயல்படக்கூடாது உள்ளூர் மக்க ளின் அறிவை பெற்று நாம் செயல் படவேண்டும் என சொன்னார். கற் காலம் முதல் தாமஸ்மன்றோ காலம் வரை மாற்றத்திற்கு வித்தட்ட மண் தருமபுரி என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மருத்து வர் சீனிவாசராஜ்,அரசு பொறியில் கல்லூரிமுதல்வர் வி.சுமதி, அரசு சட் டக்கல்லூரி முதல்வர் சிவதாஸ், தொல்லியல்துறை முன்னாள் அலு வலர் தி.சுப்பிரமணியன், தொல்லியல் ஆர்வலர் த.பார்த்திபன்,மருத்துவர் கே.பழனி, அரிமா.எஸ்.தீபக்குமார், பொ.சச்சிதாநந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். நல்லாம்பட்டி மாணவர்கள் தமி ழர் தற்காப்பு பயிற்சி குறித்த கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு புத்தகதிரு விழா சார்பில் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டது.   முன்னதாக, தருமபுரி புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருவதை  உயர் கல்வித்துறை அமைச்சர் கே. பி.அன்பழகன் பார்வையிட்டர். அப்போது அவர் பேசுகையில், “சென்ற ஆண்டு நடைபெற்ற முதல் புத்தகத் திருவிழாவில் தருமபுரி மாவட்டத் தைச் சார்ந்த பொது மக்களும், இளை ஞர்களும் அதிக அளவில் புத்தகங் களை வாங்கிச் சென்றனர். இவர்க ளின் பெரும் வரவேற்பை அடுத்து தற்போது தகடூர் புத்தக பேரவை சார்பில் இரண்டாவது புத்தகத்திரு விழா சிறப்பாக நடைபெற்று வரு கிறது. தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களும், பொதுமக்களும் தங்களின் அறிவை வளர்த்துக் கொள்ள இந்தப் புத்தகத்திருவிழாவை பயன்படுத்தி அதிக அளவில் புத்தகங் களை வாங்கிப் படிக்க வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையிலும்,  இளைஞர்கள் தொழில் முனைவோ ராக மாறும் வகையிலும், அவர்க ளுக்கு வழிகாட்டும் வகையில் பல் வேறு புத்தகங்கள் இந்த புத்தகத் திரு விழாவில் இடம்பெற்றுள்ளது. இதை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு இளைஞர்கள் தொழில் முனைவோராகவும், மற்றவர்க ளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகை யிலும் தங்களது வாழ்வாதாரத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என பேசினார். இதில் பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் பொன்னுவேல், நகர கழக துணை செயலாளர்  பூக்கடை ரவி, தகடூர் புத் தகப் பேரவையை செயலாளர் மருத் துவர் செந்தில், சிசுபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.