தருமபுரி, மே 15-தருமபுரி அருகே உள்ள செம்மாண்டகுப்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர் என்.முத்துவின் 9 ஆம் ஆண்டுநினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்திய விடுதலைக்கு பின் விவசாயிகளின் உரிமைக்கான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு,கம்யூனிஸ்ட் கட்சியால்ஈர்க்கப்பட்டவர் தோழர் என்.முத்து. 1954 ஆம் ஆண்டு தனதுகாவல்துறை பணியை துறந்துகம்யூனிஸ்ட் கட்சியில் தன்னைஇணைத்துக் கொண்டார். 1966ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்திலிருந்து தருமபுரி மாவட்டக் குழு பிரிக்கப்பட்டு உருபெற்ற கட்சியின் புதிய மாவட்ட குழுவின் செயலாளராக பொறுப்பெற்ற தோழர் என்.முத்து 20ஆண்டுகாலம் திறம்பட செயல்பட்டார்.தருமபுரி மாவட்டத்தில் நீலமீட்சி ஜாகீர் போராட்டம்,குத்தகை விவசாயிகள் வெளியேற்றம், கந்துவட்டி கொடுமை,சாதிய நாட்டாமை போன்றவற்றிற்கு எதிராக தீவரமாக போராடினார். இவரது போராட்டகுணத்தால் ஏராளமான இளைஞர்களை கட்சியின் பால் ஈர்த்தவர். இவரின் 9ஆம் ஆண்டுநினைவு தினம் புதனன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் முத்து அறக்கட்டளையின் சார்பில் நினைவாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் தலைவர் எம்.ஆறுமுகம், செயலாளர் ஜி.வெங்கட்ராமன், பொருளாளர் வி.மாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சிசுபாலன், கே.என்.மல்லையன், டி.எஸ்.ராமச்சந்திரன், சோ.அருச்சுணன், வே.விசுவநாதன், ஒன்றிய செயலாளர்கள் தருமபுரி என்.கந்தசாமி, நல்லம்பள்ளி கே.குப்புசாமி, இண்டூர் பி.டி.அப்புனு, பாப்பாரப்பட்டி ஆர்.சின்னசாமி, மாவட்ட குழு உறுப்பினர் ரவி, நிர்வாகிகள் டி.தீர்த்தகிரி, குப்புசாமி, இராமன்,மாரியப்பன், கனேசன், அனைத்திந்திய மாதர்சங்க ஒன்றிய நிர்வாகிகள் எம்.பாப்பாரப்பட்டி, கே.சுசிலா, தமிழ்செல்வி மற்றும் தோழர் என்.முத்துவின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.