tamilnadu

img

புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறுக சிபிஎம் பிரச்சார இயக்கம்

 பென்னாகரம், ஆக.7- தேசிய கல்விக்கொள்கை வரைவை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சின்னம் பள்ளி பகுதியில் புதனன்று பிரச்சார இயக்கம் நடைபெற்றது. மத்திய பாஜக அரசு உருவாக்கியுள்ள தேசிய கல்வி கொள்கையால்  கல்லாமை அதிகமாக உருவாக்கும் நிலை ஏற்படும். 3,5,8 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு என்பது கல்விச் சுமையை மாண வர்களுக்கு அதிகமாக்கும். எனவே இந்த  கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும். கல்விக் கொள்கையை முழுவது மாக மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் மற்றும் பிரச்சார இயக்கங்கள் நடத்தப்படுகிறது.  அதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம்,  பென்னாகரம்  வட்டம், சின்னம் பள்ளி  பகுதியில் பிரச்சார இயக்கம் நடை பெற்றது. இந்தப் பிரச்சார இயக்கத்திற்கு மாவட்ட செயலாளர் ஏ.குமார் தலைமை  வகித்தார். சின்னம் பள்ளி பகுதி செய லாளர் சக்திவேல், பகுதி குழு உறுப்பி னர்கள் செல்வம், வாஞ்சி, மனோகரன், மாது, செட்டி உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். முன்னதாக பெரிய கடைமடை பகுதியில் துவங்கிய இந்த பிரச்சார பயணம்  கொப்பலூர் சின்னம் பள்ளி வழியாக பெரும்பாலையில் நிறைவு பெற்றது.