tamilnadu

img

இந்திய மாணவர் சங்கத்தின் பொன்விழா ஆண்டு கபாடி போட்டி

தருமபுரி, மார்ச் 2- இந்திய மாணவர் சங்கத்தின் பொன் விழா  ஆண்டை முன்னிட்டு தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் கபாடி போட்டிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைத்தலை வர் என்.தமிழமுதன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சதீஷ் முன்னிலை வகித் தார். மாவட்ட பொருளாளர் ஆடலரசு வர வேற்றார். காவல்துறை உதவி கண்காணிப் பாளர் சாய்சிங் மீனா, இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் ஏ.டி.கண்ணன், மத்தியக் குழு உறுப்பினர் நிருபன்சக்கரவர்த்தி, மாநி லக்குழு உறுப்பினர் தினேஷ்ராஜா ஆகி யோர் போட்டிகளை துவக்கி வைத்து சிறப்பு றையாற்றினர். இலக்கியம்பட்டி ஊராட்சி மன்றத் தலை வர் சுதா ரமேஷ், தமிழ்நாடு நடுநிலை, உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் ச.கவிதா, முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநி லகுழு உறுப்பினர் நாகைபாலு, சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்க மாநில  துணைத் தலைவர் வி.பி.சாமிநாதன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். இந்த கபாடிபோட்டியில் மாவட்டம் முழு வதும் இருந்து 25 கபாடி குழுக்கள் பங்கேற் றன. முதல் பரிசான ரூ.10 ஆயிரத்தை தரு மபுரி அதியான் அரண்மனை நிறுவனர் கி. கோவேந்தன், இரண்டாம் பரிசான ரூ.7 ஆயி ரத்தை இந்திய மாணவர் சங்கமும், மூன்றாம் பரிசான ரூ. 5 ஆயிரத்தை உதயா பவுன்டே சன் நிறுவனர் எம்.ரேனுகாதேவி, நான்காம் பரிசான ரூ. 4 ஆயிரத்தை  மாவட்ட கல்வி அலுவலர் (ஓய்வு) சி.ராஜசேகர் ஆகியோர் வழங்கினர். நிறைவாக மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.பிரசாந்த் நன்றி கூறினார்.