பென்னாகரம், ஜூன் 19- தருமபுரி மாவட்டம் பென்னாக ரம் அடுத்த மாங்கரை கிராமத்தை சேர்ந்த 23 வயது இளைஞர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள சிப்ஸ் கடையில் பணிபு ரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 17 ஆம் தேதி சொந்த ஊர் செல்வதற்காக பெங்களூரில் இருந்து லாரி மூலம் தருமபுரி வந்துள்ளார்.
அங்கிருந்து அரசு பேருந்தில் பென்னாகரம் வந்து சேர்ந்தார். இதனைத்தொடர்ந்து பென்னாகரம் வந்த அந்த இளை ஞர் அங்குள்ள தனது நண்பர் ஒரு வருடன் பேசிவிட்டு சளி பரி சோதனை செய்து கொள்வதற்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்றுள் ளார். அரசு மருத்துவமனைக்கு பரி சோதனைக்கு சென்ற அந்த இளை ஞரின் சளி மற்றும் ரத்த மாதிரியை எடுத்து விட்டு பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை மருத்து வர்கள் அலட்சியமாக சொந்த ஊருக்கு செல்ல அனுமதித்து விட்டனர்.
பின்னர் மருத்துவ மனையிலிருந்து வெளியே வந்த அந்த நபர் ஆட்டோ மூலம் தனது பாட்டி ஊரான புதுப்பட்டிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் அந்த இளைஞரின் ரத்த மாதிரியில் கொரோனா பாசிட்டிவ் இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து சுகாதாரப் பணியாளர்கள் அந்த இளைஞரை ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கடந்த வாரம் பல லட்சம் மதிப்பில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கருவி வந்துள்ளது. இந்த கருவி யின் மூலமாக 4 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை செய்து பரிசோதனை முடிவினை நோயா ளிக்கு தெரிவிக்க முடியும். மேலும் பரிசோதனை செய்யும் நோயாளி களை பரிசோதனை முடிவு வரும் வரையில் அங்கு ஏற்படுத்தப்பட் டுள்ள படுக்கையில் தனிமைப்ப டுத்தி பரிசோதனை முடிவு வந்த பின்னரே வெளியே செல்ல அனு மதிக்கப்பட்டு இருக்கவேண்டும். ஆனால் மருத்துவமனை நிர்வா கத்தின் அலட்சியத்தின் காரண மாக, பரிசோதனை மட்டும் எடுத்து விட்டு அந்த நோயாளியை வெளி யில் செல்ல அனுமத்தித்துள்ளனர்.
இந்த அலட்சியத்தால் வெளியில் செல்ல அனுமதிக்கபட்ட அந்த நோயாளி அதிக இடங்களில் பய ணம் செய்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இத னால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
எனவே, இனிவரும் காலங்க ளிலாவது பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் முறையான பரிசோதனைகளை மேற்கொண்டு கொரோனா பர வல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடு பட வேண்டும் என சமூக ஆர்வ லர்கள் தெரிவித்துள்ளனர்.