தருமபுரி, ஜூன் 13- புதியதாக கட்டப்பட்ட நல்லம் பள்ளி பேருந்து நிலையத்தில் பேருந்துகள் செல்லாததால் தற் போது சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. தருமபுரி மாவட்டம், நல்லம் பள்ளி ஊராட்சி ஒன்றியத்தின் தலையிடமாக செயல்பட்டு வந்தது. மக்கள் தொகை பெருக்க ததுக்கேற்ப நிர்வாக வசதிக்காக தருமபுரி வட்டத்தில் இருந்து பிரித்து நல்லம்பள்ளியை தனி வட்டமாக உருவாக்கப்பட்டது. இந்த வட்டத்தில் 32 ஊராட்சிகள் உள்ளன. தருமபுரியில் இருந்து சேலம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் நல்லம்பள்ளி வழி யாகத்தான் செல்லவேண்டும். இப்படி தனியார் மற்றும் அரசு பேருந்துகள் என தினமும் நூற் றுக்கணக்கான பேருந்துகள் நல் லம்பள்ளி வழியாக செல்கிறது. மேலும், அதிக நிலப்பரப்பு கொண்ட இந்த வட்டத்தில் பல கிராமங்களுக்கு அரசு பேருந்து கள் சென்று வருகின்றன. அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் நல்லம்பள்ளியில் இயங்கி வருகின்றன. மேலும் நல்லம்பள்ளி வட்டத்தில் உள்ள கிராமங்களில் உள்ள மக்கள் வெளியூருக்கு செல்ல நல்லம்பள்ளிக்கு வந்து தான் பேருந்து ஏறவேண்டும். பேருந்துக்காக வரும் பொது மக்கள் சாலையின் ஓரத்தில் வெயில் மற்றும் மழையில் நிற்க வேண்டிய நிலை இருந்தது. எனவே நல்லம்பள்ளியில் வெளியூர் செல்லும்பேருந்துகள் மற்றும் கிராமங்களுக்கு செல் லும் பேருந்துகள் நின்று செல்லும் வகையில் புதிய பேருந்துநிலை யம் அமைக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாடாளு மன்ற தொகுதி மேம்பாட்டு திட் டத்தில் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய பேருந்துநிலையம் அமைத்து திறப்பு விழா செய்யப் பட்டது. இந்த பேருந்து நிலையத் துக்கு கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகளும் வெளியூர் பேருந்து கள் என எந்த பேருந்தும் செல்வ தில்லை. இதனால் மக்கள் பேருந்து நிலையத்துக்கு செல்வ தில்லை. இதன்காரனமாக புதிய பேருந்துநிலையம் மது அருந்து பவர்களின் கூடாரமாக மாறி யுள்ளது. மேலும் இரவு நேரங் களில் சமூகவிரோத சம்பவங் களும் நடக்கிறது. மொத்தத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது . எனவே, அனைத்து பேருந்து களும் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லவும், பேருந்து நிலை யத்திற்குள் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வா கத்திடம் கோரிக்கை வைத்துள்ள னர்.