tamilnadu

img

கொரோனா நிவாரணம் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஆக. 24- கொரோனா பொதுமுடக்க கால நிவார ணம் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் பாலக்கோடு வெள்ளிச் சந்தையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா பொதுமுடக்க கால நிவார ணமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம்  ரூ.7 ஆயிரத்து 500 வழங்க வேண்டும். நூறு நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி ரூ.600 ஊதியமாக வழங்க வேண்டும்‌. விவ சாயத்தை சீரழிக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையை திரும்பப்பெற வேண்டும்.

தலித் மற்றும் பழங்குடிப் பெண் கள் மீதான வன்கொடுமையைத் தடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாலக்கோடு வெள்ளிச்சந்தை யில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் சி.ராஜா தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, டி.எஸ்.ராமச்சந்திரன், வட் டச் செயலாளர் ஜி.நக்கீரன் மற்றும் என்.சந் திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆவேச முழக்கங்களை எழுப்பி னர்.