தருமபுரி, ஆக.10- கூட்டுறவுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பு மாறு, தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.செளந்தர ராஜன் தருமபுரியில் செய்தியாளர் களிடம் தெரிவித்தார். மேலும் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது, கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தின் 14ஆவது மாநில பிரதிநிதித்துவ பேரவை தருமபுரியில் நடைபெற்றுவரு கிறது. இந்த பேரவையில் தமிழகம் முழுவதும் இருந்து 600க்கும் மேற் பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள் ளனர். கூட்டுறவுத்துறையில் 5 ஆயிரம் பேர் பணியாற்றும் இத் துறையில் தற்போது 3,500 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். இதனால் 1,500க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளது. குறிப்பாக கூட்டுறவு சார்பதிவாளர் பணியிடம் 578 காலிப்பணியி டங்கள் உள்ளன. அதேபோல் அங்காடி, பொது விநியோகத் திட்டத்தை கண்காணிக்கக்கூடிய கூட்டுறவு சார்பதிவாளர்கள் பணி யிடம் 500க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. உடனடி யாக இந்த காலிப்பணியிடங்களை நிரப்பி களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும். அதேபோல் அங்காடியை ஆய்வு செய்யக்கூடிய சார் பதிவாளர்கள், கூட்டுறவு சங்கங்களை ஆய்வு செய் யக்கூடிய கள அலுவலர்களுக்கு கட்டிட வசதி, வாகனவசதி ஏற் படுத்தி தர வேண்டும். கூட்டுறவு சங்கங்களை ஆய்வுசெய்யக்கூடிய கள அலுவலர்களால் தமிழ்நாடு குடிமைப்பணி விதிகளின் கீழ் 17-ஏ,17-பி. போன்ற குற்றக்குறிப் பாணை வழங்கப்படுகிறது இதற்கு உரிய காலத்தில் விசாரித்து தீர்வு காணவேண்டும். தமிழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப் பட்டு வருகிறது. இந்த திட்டத்தை ரத்துசெய்துவிட்டு பழைய ஓய்வூ தியம் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மேலும் சங்கங்களில் நிர்வாகப் பணியில் ஈடுபடும் கண்காணிப் பாளர்கள் துறை அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப் படுகின்றன. துறையின் அனுமதி பெற்ற பின்புதான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூட்டுறவு தணிக்கைத்துறையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூட்டு றவுத்துறையிலும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் போது அரசு தலைமையின் அனுமதிபெற்ற பிறகுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநாட்டின் மூலம் பதிவாளரையும், தமிழக அரசையும் கேட்டுக்கொள்கிறோம். மேலும் நியாய விலைக்கடை ஆய்வு, கூட்டுறவு சங்கங்களை ஆய்வு, கிராமப்புற கூட்டுறவு வங்கிகள் ஆய்வு, நகர வங்கிகள் ஆய்வு போன்ற மக்களின் அத்தியா வசிய சேவைகளை செய்துவரும் இத்துறையில் காலிப்பணியிடங் கள் நிரப்பவேண்டும். மேலும் கூட்டுறவு சார்பதிவாளர்களுக்கு வாகன வசதி, வட்டார அளவில் கூட்டுறவு சார்பதிவாளர்களுக்கு கட்டிட வசதி ஏற்படுத்தி தர வலி யுறுத்தி ஆகஸ்ட் 18ஆம் தேதி பேக்ஸ் அனுப்பும் இயக்கமும், செப்டம்பர் 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங் களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடைபெறுகிறது. இதையடுத்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் அக்டோபர் 18 ஆம் தேதி யன்று சென்னையில் உள்ள பதி வாளர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு, பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெறும் என தெரி வித்தார்.