தருமபுரி, ஜன.2- தருமபுரியில் செவிலியா்களுக்கு உணவுப் பொருள் கலப்படத்தை கண்டறியும் பயிற்சி உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் அளிக்கப்பட்டது. தருமபுரி சந்தைப்பேட்டை நகர ஆரம்ப சுகாதார நிலை யத்தில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமில், வட்டார மருத்துவ அலுவலா் எம்.ஆா்.பாலவெங்கடேசன், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் எம்.கே. தமிழ்ச் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். நகராட்சி, ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலா் கே.நந்தகோபால் வரவேற்றுப் பேசினார். மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் ஏ.பானு சுஜாதா தலைமை வகித்து, உணவுப் பொருள் களில் கலப்படத்தை எளிய முறையில் கண்டறியும் வழி முறைகள் மற்றும் கலப்படப் பொருள்களை பயன்படுத்து வதால், உடல் நலத்துக்கு ஏற்படும் தீங்குகள் குறித்து எடுத்து ரைத்தார். இதில், கிராமப்புற மற்றும் நகா்ப்புற ஆரம்ப சுகதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியா்கள் கலந்து கொண்டனா்.