தருமபுரி, ஜூலை 30- தகடூர் அவ்வை அதியமான் பேரவை சார்பில் இந்திய குடி மைப்பணி தேர்வு (ஐஏஎஸ்) தமிழில் எழுதலாம் என்ற தலைப் பில் கருத்தரங்கம் தருமபுரி அரசு கலைகல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரி முதல் வர் (பொறுப்பு ) ஜெ.பாக்கியமணி தலைமை வகித்தார். இதில் தமிழ் நாடு பாடநூல் நிறுவன துணை இயக்குனர் டி.சங்கரசரவணன் பேசியதாவது, மக்களாட்சி நாட் டில் மக்களுக்காக வேலை செய்ய வேண்டும் என்றால், நாட்டிற்கு நல்லது நடக்க வேண்டும் என விரும்பினால் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆகவேண்டும்.இது தான் நாட் டின் முதுகெழும்பு என சொல்கி றோம். 1948 முதன் முதலில் தமிழ கத்தில் ஐஏஎஸ் அதிகாரி தேர்ந் தேடுக்கப்பட்டார். ஐஏஎஸ் அதி காரிகளாக தமிழகத்தில் இருந்து 10 சதவிகிதம் பேர் உருவாகிக் கொண்டு இருக்கின்றனர். குறைந்தது ஒரு இளநிலை படிப்பு படித்தால் போதும், எல் லா வகையான போட்டித்தேர்வு களையும் எழுதலாம். எல்லா போட்டி தேர்வுகளுக்குமான முக் கிய தேர்வு ஐஏஎஸ் தேர்வு ஆகும். இந்த தேர்வு எழுத முதற்கட்ட தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முக தேர்வு எழுதவேண்டும். இந்த தேர்வை 8 லட்சம் முதல் 10 லட் சம் பேர்வரை எழுதுகின்றனர். இதில் 98 சதவிகிதம் பேர் தோல் வியடைகின்றனர். 2 சதவிகிதம் பேர் தான் ஐஏஎஸ் தேர்வில் வெற்றியடைகின்றனர். முதலில் குடிமைப்பணி தேர்வு எழுதவேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும். எப்போதுமே நம் நினைப்பு பெரிதாக இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் நினைத்தது ஓர் அளவுக்காவது நிறைவேறும். குடிமைப்பணி தேர்வு எழுத தினமும் பொது அறிவை வளர்க்கும் வகையில் பள்ளிபாடநூல்கள், நாளிதழ், இணையம், பயிற்சி மையத்துக்கு செல்வது, உரையாடுவது, இயற் புக்கில் தகவல்கள் வரும்யூ தக வல்கள், தேர்வில் வெற்றிபெற்ற வரிடம் உரையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடவேண்டும். ஐஏஎஸ் தேர்வுக்கு தயாரானால் மற்ற துறை தேர்வில் எழுதி வெற்றிபெற முடியும். ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்றால் ஒரு சில வருடத்திலேயே மாவட்ட ஆட்சியர் ஆகலாம். இந்தியா முழுவதும் 4 ஆயிரம் ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளனர். தமிழகத்தில் 300 ஐஏஎஸ் அதிகாரி கள் உருவாகியுள்ளனர். 1984 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வு தமிழில் எழுதி பாலகிருஷ்ணன் தேர்வு பெற்றார். இவர் தமிழ் இலக்கி யத்தில் முதுகலைபட்டம் பெற்ற வர். இவர் ஒரு முதல் தேர்விலேயே வெற்றி பெற்றார் என அவர் தெரி வித்தார். மேலும், தமிழகத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தோர் போட்டிதேர்வுகளில் வெற்றி பெற்றுவதில் முதலிடத்தில் உள் ளனர். பின்னர் காஞ்சிபுரம், நாமக்கல், திருநல்வேலி ஆகிய மாவட்டங்கள் பின்தொடர்ந்து வெற்றி பெறுவதாக தெரிவித்தார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் இ.பி.பெருமாள், சீனிவாசன் தகடூர் அவ்வை அதிய மான் பேரவை நிர்வாகிகள் இராஜசேகர், இரா.சிசுபாலன், தி.சுப்பிரமணியன், ராஜன், கண் ணன் உள்ளிட்டோர் பேசினர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற னர்.