தருமபுரி, ஜூன் 3-தருமபுரியில் விதிமுறைகளை மீறியதாக 747 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் குற்றசம்பவங்களை தடுக்கும் வகையில் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன், மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவேண்டும் என்று உத்தரவிட்டார்.இதன்பேரில் அந்தந்த காவல்நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் தீவிரரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்த ரோந்துபணியின் போது மதுபாட்டில் பதுக்கிவைத்து விற்பனை, சூதாட்டம், தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை , புதுபட சிடி, தலைகவசம் இல்லாமல் அதிவேகத்தில் வாகனம் ஓட்டுபவர், ஆட்டோக்களில் கூடுதல் ஆட்களை ஏற்றி சென்றவர், மது குடித்து விட்டு வாகனம் ஓட்டியவர்கள் என 747 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.