சென்னை, ஆக. 10- பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசிய நடிகை மீராமிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையி னர் வழக்கு பதிவு செய் துள்ளனர். நடிகை மீராமிதுன் பட்டி யல் சாதியை சேர்ந்த இயக்கு நர்கள், அந்தச் சமூகத்தை சேர்ந்தவர்களை இழிவுப் படுத்தும் வகையில் ஆபாச மாக, அருவருக்கத்தக்க வகையில் பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பி லிருந்து கண்டனங்கள் எழுந்தன. எனவே, மீராமிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அலுவலகச் செயலா ளர் பி.ஆர்.முரளி மயிலாப் பூர் காவல் நிலையத்திலும், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் பி.சுந்தரம் வேப்பேரி காவல் நிலை யத்திலும் புகார் அளித்தனர். இதேபோன்று பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் புகார்கள் அளிக்கப்பட்டன. மேலும், விடுதலை சிறுத் தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு சென்னை மத்திய குற்றப்பிரிவில் கொடுத்தப் புகாரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதன்பின், கலகம் செய்ய தூண்டுவது, சாதி, மத விரோ தத்தை தூண்டுவது, இரு பிரிவினரிடையே மோதலை உருவாக்குவது, வன் கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து காவல் நிலையங்களில் அளிக்கப் பட்ட புகார்கள் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப் பட்டு, வழக்கில் இணைக் கப்பட்டுள்ளன.