tamilnadu

img

சைபர் அச்சுறுத்தல்களிலிருந்து கணினிகளை பாதுகாக்க இலவச சேவை

கொரோனா வைரஸ் தாக்குதலாலும், ஊரடங்காலும் உலகம் வலுவான பொருளாதார பாதிப்பில் உள்ளது. 

 அதேசமயம், இணையதளத்தின் வாயிலாக நுழைந்து தகவல்களை திருடும் ஹேக்கர்களை நாம் அனுமதிக்க கூடாது. பாதிப்பிற்கு பின்னர் தீர்வை தேடுவதை விட, சரியான நேரத்தில் பிரச்னையை சந்திப்பது எவ்வளவோ நல்லது. 

ஸ்டார்ட்அப் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிமா பிஸினஸ் சொல்யூசன்ஸ், புதிய மிகவும் சக்தி வாய்ந்த தீர்வுகளை கருவிகள் வாயிலாக பயன்படுத்த உருவாக்கியுள்ளது. ’டிமா வாரியார்’ என்ற அதன் பெயருக்கு ஏற்ப, ரான்சம்வேர், மால்வேர், பிஷிங், கிரிப்டோ மைனிங், கமாண்ட் அன்ட் கண்ட்ரோல், டொமைன் ஜெனரேஷன் அல்கரிதம், டிஎன்எஸ் பூபிங் மற்றும் டிஎன்எஸ் ரீபைன்டிங் போன்றவைகளுக்கு எதிராக இது போராடும். டிமா வாரியார்,  அச்சுறுத்தல்களுக்கு ஏற்ப அடிக்கடி மேம்படுத்தப்பட்டு மாற்றி அமைக்கப்படுகிறது. 

 ஊரடங்கின்போது இலவசம் : 
கொரோனாவை உலகமே எதிர்த்து போரிடும் இந்த தருணத்தில் அறிமுகமாகும், ஊரடங்கு சமயத்தில் இலவசமாக தர முடிவு செய்துள்ளோம். இந்த வகையில், கொரோனாவை ஒழிக்க பாடுபடும் நிறுவனங்களுக்கும் அரசுக்கும், இணைய அச்சுறுத்தலை ஒழிக்க உதவி வருகிறோம். மேலும் விபரங்கள் அறிய எங்களை தொடர்பு கொள்ளுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும், எங்களது தயாரிப்பை பயன்படுத்த உதவி செய்கிறோம் என   டிமா பிசினஸ் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்  தேவராஜ் பழனிசாமி கூறியுள்ளார்.மேலும் விவரங்களுக்கு பார்க்கவும்

www.dimabusiness.com or write to us at: warrior@dimabusiness.com, www.dimabusiness.com