இந்தியா - இங்கிலாந்து
இடம் : பிர்மிங்ஹாம்
நேரம் : பிற்பகல் 3 மணி
வெற்றி 50% : 50% வாய்ப்பு
மழை வருமா?
பிர்மிங்ஹாம் நகரில் மழைக்கு வாய்ப்பில்லை என்றாலும் வானம் மேக மூட்டத்துடன் காணப் படும். பிற்பகல் நேரங்களில் 24 கிமீ வேகத்தில் குளிர்ந்த காற்று வீசும் என்பதால் லேசான சாரல் மழை பெய்யும் என எதிர் பார்க்கப்படுகிறது.
ஆடுகளம் எப்படி?
வேகம், சுழல் இரண்டும் சரிசமமாக எடுபடும். பவுன்சர் நன்றாக எகிறினாலும் ஸ்விங் வகை பந்துவீச்சு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். சேஸிங் செய்யும் அணிகளுக்கு கடும் சிக்கலை உருவாக்கும்.
உலகக்கோப்பை ஆதிக்கம்
மொத்த ஆட்டங்கள் - 7
இந்தியா - 3
இங்கிலாந்து - 3
டை - 1
சேனல்
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (அனைத்து இந்திய மொழிகளிலும்), டிடி ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஸ்மார்ட் போனில் இலவசம், கணினியில் 5 நிமிடம் மட்டும்), இந்திய வானொலி
ஆசிய அணிகளிடம் திணறலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணி இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 8 புள்ளிக ளுடன் 4-வது இடத்தில் உள்ளது. இந்திய அணிக்கெதிரான ஆட்டத்தைச் சேர்த்து இங்கிலாந்து அணிக்கு இன்னும் இரண்டு ஆட்டங்கள் (கடைசி ஆட்டம் - நியூஸிலாந்து) உள்ளன. இந்த இரண்டு ஆட்டத்திலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால் வாழ்வா? சாவா? என்ற அடிப்படையில் இந்திய அணியை இங்கிலாந்து அணி ஞாயிறன்று எதிர்கொள்கிறது. இந்திய அணி 6 ஆட்டங்களில் விளை யாடி 11 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருப்பதால் அரையிறுதி வாய்ப்பு குறித்து அந்த அணி கவ லைப்படத் தேவையில்லை. இருப்பி னும் முதலிட அந்தஸ்துடன் தான் அரை யிறுதிக்குப் போவோம் என அடம் புடிக்கும் இந்திய வீரர்கள் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்ற னர். இதனால் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பல்வேறு வகை யில் சிக்கலைச் சந்திக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது. இரு அணிகளும் சம பலத்தில் இருந்தாலும் இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் வெற்றி நடை யுடன் வலம் வருவதால் அந்த அணி வெற்றிபெறச் சகல வாய்ப்புகளும் உள்ளன.