கத்துக்குட்டியான ஆப்கானிஸ் தான் அணி ஆசிய கண்டத்தில்உள்ள நாடாகும். மிக குறுகிய காலத்தில் சிறப்பான பார்மை பிடித்துள்ள ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்றிலும் சிறப்பாக விளையாடக் கூடியது.களத்தில் வீரர்கள் துருதுருவென இருப்பார்கள். பலம், பலவீனம் என அணியை வேறுபடுத்திப் பார்க்கமாட்டார்கள். எதிரணி சற்று சந்தால்மூர்க்கத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். வேகப்பந்துவீச்சு ஆப்கானிஸ் தான் வீரர்களுக்குப் பிடிக்காது.இந்திய அணியைப்போல சுழற்பந்து வீச்சு தான் இவர்களின் முக்கிய யூனிட். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் சுழற்பந்து வீச்சுக்காக மாயாஜால வித்தையெல்லாம் கடைப்பிடிக்கமாட்டார் கள். பிட்சின் மையம் மற்றும் ஸ்டெம்பின் மையம் ஆகியவற்றைக் கவனமாகக் கணித்து ஸ்விங் செய்து விடுவார்கள். இந்த வகையான பந்துவீச்சின் மூலம் தான் ஆப்கானிஸ்தான் அணி பலமான அணியை கூட எளிதில் பந்தாடி விடுகிறது. ஆனால் பேட்டிங்கில் வேகப்பந்துவீச்சைத் துவைத்து விடுவார்கள். தொடக்கம் நன்றாக அமைந்தால் மூன்று விதமான பந்துவீச்சைப் பயமில்லாமல் அடித்து விளையாடுவார்கள்.தொடக்க வீரர்கள் நன்றாக பேட்டிங் செய்தால் பின் வரிசை வீரர்களும் நன்றாக பேட்டிங் செய்வார்கள்.தொடக்க வீரர்கள் சொதப்பினால் மற்ற வீரர்கள் சீட்டுக்கட்டைப் போலச் சரிந்துவிடுவார்கள். வெற்றி,தோல்விக்கான உணர்வுகளை வெளிப்படுத்தத் தெரியாதவர்கள்.பலமான நாடுகள் கூட சில சமயம் பார்ம்பிரச்சனையில் சிக்கும்.ஆனால் ஆப்கானிஸ்தான் அணி பார்ம் பிரச்சனை யில் சிக்குவது அரிது. வரும் உலகக்கோப்பை தொடரில் முதன் முறையாகக் களமிறங்கும் ஆப்கானிஸ்தான் அணி எந்தவிதத்தில் விளையாடுகிறது எப்படி முன்னேறுகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.