விக்கெட் விழுந்தவுடன் தாஹிர் சந்தோஷத்தைக் கொண்டாடுவதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும். அந்த மகிழ்ச்சியுடன் இணைய எனக்கும் வாட்சனுக்கும் அது மிகவும் கடினமான செயல். ஏனென்றால் விக்கெட் விழுந்தவுடன் தாஹிர் பெரும்பாலும் மைதானத்தின் மறுபக்கத்துக்குத் தான் ஓடுவார்.எதற்காக அங்கு சென்று வாழ்த்து தெரிவிக்க வேண்டும். ஓடி முடித்து அவர் இடத்துக்குத் திரும்பிய பிறகு ‘நன்றாக பந்துவீசினாய்... வெல் டன்’ என்று கூறிவிட்டு நாங்கள் எங்கள் இடத்துக்குச் சென்று விடுவோம்.
ஐபிஎல் சென்னை அணி கேப்டன் தோனி அளித்த கலகல பேட்டி