இந்தியாவிற்குச் சுற் றுப்பயணம் மேற் கொண்டுள்ள தென் ஆப்பி ரிக்க கிரிக்கெட் அணி தற் போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் (விசா கப்பட்டினம்) இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி புனே வில் வியாழனன்று தொடங்கி யது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து கேப்டன் விராட் கோலியின் (254) இரட்டை சதம் மற்றும் மயாங்க் அகர் வாலின் (108) சதத்தின் உதவி யால் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 601 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்ச மாக ரபடா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. தொடக்க வீரர்கள் மார்க்கிராம் (0), எல்கர் (6) மற்றும் மிடில் ஆர்டர் வீரர் பவுமா (8) ஆகி யோரை உமேஷ் யாதவ் அடுத்தடுத்து வெளியேற்றி னார். 2-வது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 15 ஓவர்கள் முடிவில் 3 விக் கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்தது. சனியன்று தொடங்கிய 3-வது நாளின் தொடக்கத் தில் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் ஆன்ரிச்சை (3) ஷமி வெளியேற்றினார். பிரயூன் (30), கேப்டன் பிள சிஸ் (64), விக்கெட் கீப்பர் (31) ஆகியோர் சீரான வேகத்தில் ரன் குவித்து அணியை சரி விலிருந்து மீட்டனர். பிளசிஸ், டி-காக்கை அஸ்வினும் பிர யூனை உமேஷும் வெளி யேற்ற, முத்துச்சாமியை (7) ஜடேஜா பெவிலியனுக்கு அனுப்பினார். தேனீர் இடை வேளைக்குள் தென் ஆப்பி ரிக்காவின் இன்னிங்ஸ் நிறை வடைந்து பாலோ-ஆன் பெறும் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில், பிலாந்தர் (44) - மகாராஜ் (72) ஆகி யோர் ஜோடி சேர்ந்து இந்திய பந்துவீச்சை பிழிந்தெடுத்த னர். இந்த ஜோடியை அஸ்வின் பிரித்து மகாராஜை ஓய்வெடுக்க அனுப்பி கடைசி விக்கெட்டான ரபடாவை பதம் பார்த்து தென் ஆப்பி ரிக்காவின் முதல் இன்னிங்ஸை முடிவுக்குக் கொண்டு வந் தார். தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 105.4 ஓவர்களில் 275 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்ச மாக அஸ்வின் 4 விக்கெட்டு களை வீழ்த்தினார். அத்து டன் 3-வது நாள் நிறைவு பெறு வதாக நடுவர் அறிவித்தார்.