உலகின் முதன்மையான டி-20 லீக் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடரின் நடப்பாண்டிற்கான சீசன் மார்ச் 29-ஆம் தேதி மும்பையில் தொடங்குகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் ஒவ்வொரு அணி மற்ற 7 அணிகளுடன் தலா 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரில் தமிழக அணியாகப் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்திலேயே நடப்பு சாம்பியனான மும்பை அணியை எதிர்கொள்கிறது.இந்த ஆட்டம் தான் ஐபிஎல் தொடரின் தொடக்க ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை அணியின் ஆட்டங்கள்:
மார்ச் 29, 2020 - மும்பை
ஏப்ரல் 2, 2020 – ராஜஸ்தான்
ஏப்ரல் 6, 2020 - கொல்கத்தா
ஏப்ரல் 11, 2020 - பஞ்சாப்
ஏப்ரல் 13, 2020 – தில்லி
ஏப்ரல் 17, 2020 - பஞ்சாப்
ஏப்ரல் 19, 2020 - ஹைதராபாத்
ஏப்ரல் 24, 2020 - மும்பை
ஏப்ரல் 27, 2020 - பெங்களூரு
ஏப்ரல் 30, 2020 - ஹைதராபாத்
மே 4, 2020 - ராஜஸ்தான்
மே 7, 2020 - கொல்கத்தா
மே 10, 2020 - தில்லி
மே 14, 2020 - பெங்களூரு