இந்திய அணியின் கேப்டன் (பொறுப்பு) ரோஹித் சர்மாவுக்கு ராஜ்கோட் டி-20 ஆட்டம் 100-வது ஆட்டமாகும். 100-வது போட்டியில் விளையாட இருக்கும் முதல் இந்திய வீரர் மற்றும் சர்வதேச அளவில் 2-வது வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார். பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் மட்டுமே இதுவரை 100 டி-20 போட்டிகளில் விளையாடி முதல் இடத்தில் உள்ளார்.