tamilnadu

img

இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸுக்கு விருது

நியூஸிலாந்து அரசு பரிந்துரை

உலகக்கோப்பை தொடரின் 12-வது சீசனில்   இங்கிலாந்து அணி நியூஸிலாந்து அணியைச் சிறப்பு விதியின் மூலம்  வீழ்த்தி முதன்முறையாகக் கோப்பையை முத்தமிட்டது.   இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றிய  பென் ஸ்டோக்ஸுக்கு நியூஸிலாந்து நாட்டின் சிறந்த நாட்டவருக்கான விருதுக்கு அந்நாட்டு அரசு பரிந்துரைத்துள்ளது.  பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து வீரர் எப்படி நியூஸிலாந்து நாட்டின் விருதைப் பெற முடி யும் என்று சந்தேகம் எழுந்தால் அது நல்ல  விஷயம் தான். ஏனென்றால்  நியூஸிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் தான் ஸ்டோக்ஸ்  பிறந்தார். அவரது பெற்றோர்கள் இன்னும் மவூரியில் (நியூஸிலாந்து) தான் வசிக்கிறார்கள். 

உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் 84 ரன்கள் விளாசி நியூஸிலாந்து அணியின் கோப்பை கனவை பறித்ததும் பென் ஸ்டோக்ஸ் தான். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நம்ம  பையன் உலகக்கோப்பையில் சிறப்பாக  விளையாடி இருக்கிறான் என்பதை கருத்தில் கொண்டு சிறந்த நியூஸிலாந்து  நாட்டவர் விருதுக்கு ஸ்டோக்ஸ் பரிந்துரை க்கப்பட்டுள்ளார். மேலும் நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சனின் பெயரும் இந்த விருதுக்குப்  பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  நியூஸிலாந்து நாட்டவர் விருதுக்கான பரிந்துரைகள் செப்டம்பர் 15-ஆம் தேதி உடன் முடிவடைகிறது. டிசம்பரில் டாப் 10 நபர்களின் பெயர் அறிவிக்கப்படும். அதில் வெற்றி பெறுபவர் பெயர் பிப்ரவரியில் வெளியாகும்  என விருது கமிட்டி அறிவித்துள்ளது.