3 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரில் பங்கேற் பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய நாட் டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடருக்கு பயிற்சி பெறும் வகையில் இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் லெவன் அணியை எதிர்கொண்டது. வியாழனன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. இது பழைய நிகழ்வு என்றாலும் இந்த ஆட்டத்தில் அரிய செய்தி ஒன்று இடம்பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி பீல்டிங் செய்யும் பொழுது அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் வாட்டர் பாயாக (குடிநீர் கொண்டு செல்லும் ஊழியராக) சேவை செய்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. ஸ்காட் மோரிசனின் செயல் கிரிக்கெட் உலகில் மிக அரிய நிகழ்வாக கருதப்படுவதால் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. கிரிக்கெட் உலகமின்றி அனைத்து தரப்பினரும் ஆஸ்திரேலிய பிரதமரின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.