முழு கடையடைப்பால் முடங்கியது உதகை
இ-பாஸ் முறையை ரத்து செய் யக் கோரி உதகையில் புதனன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்ட மக்களின் வாழ்வாதார பிரச்சனை என்பதால், இப்போராட்டம் முழு மையாக நடைபெற்றது. இத னையறியாமல் உதகைக்கு சுற்றுலா வந்த பயணிகள், உணவு, தண்ணீர் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கூட கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகினர். சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் நீலகிரி, கொடைக் கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளுடன் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த அந் தந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு உத் தரவிட்டது. இதையடுத்து, செவ் வாயன்று (ஏப்.1) முதல் புதிய கட் டுப்பாடுகளுடன் இ-பாஸ் நடை முறை அமல்படுத்தப்பட்டது. வார நாட்களில் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் வாகனங்களும் வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாக னங்களும் அனுமதிக்கப்படும் வகையில் இ-பாஸ் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த இ-பாஸ் நடைமுறையால் நீலகிரி யில் சுற்றுலாவை நம்பி உள்ள சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியா பாரிகள் கடுமையாக பாதிக்கப்படு வார்கள். சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்த்தே நீலகிரி மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் உள்ளது. எனவே, முழு கடைய டைப்பு போராட்டத்திற்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. மேலும், இக்கோரிக்கையுடன் உதகை, குன்னூர் நகராட்சி மார்க்கெட் வியா பாரிகளின் கோரிக்கையை நிறை வேற்ற வேண்டும். கூடலூர் மக் களின் நீண்ட காலப்பிரச்சனையாக செக்ஷன் 17 நிலப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு மற்றும் வன விலங்குகளிடமிருந்து மக்களை பாதுகாக்கவும், சில்லஹள்ளா நீர்த் தேக்க திட்டத்தினை கைவிடவும், பிளாஸ்டிக் தடைச் சட்டத்திற்கு முறையான மாற்று ஏற்பாடு செய் யவும், அனைத்து வாகன ஓட்டு னர்களின் வாழ்வாதாரத்தை நசுக் கும் ஓலா, உபர், ரெட் டாக்ஸி நிறு வனங்களை நீலகிரியில் தடை செய்யவும் என்பன உள்ளிட்ட 13 கோரிக்கைள் முன்வைக்கப்பட் டது. முழுமையான கடையடைப்பு முழு கடையடைப்பு போராட் டத்தையொட்டி, நீலகிரி மாவட்டத் தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர், குந்தா உள் ளிட்ட ஆறு தாலுகாக்களிலும் புத னன்று கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தது. அத்தியா வசிய தேவைகளான பாலகங்கள், மருந்து கடைகள் மட்டும் திறக்க விலக்களிக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற் றும் ஆட்டோ ஓட்டுநர்கள், சுற்றுலா கார் ஓட்டுநர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித் திருந்தனர். உதகை நகரில் அதிகாலை நேரத்தில் பரபரப்பாக காணப்படும் மார்க்கெட் பகுதி, சேரிங்கிராஸ், மத்திய பேருந்து நிலையம், மெயின் பஜார் போன்ற பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.