கோயம்புத்தூர், நவ. 6- “தமிழ்நாடு அனைத்துத்துறை களிலும் வளர்ச்சி அடைந்து, சிறந்த மாநிலமாக உள்ளது. இப்போது, தெற்குதான் வடக்கிற்கும் வாரி வழங்குகிறது” என கோவை விழா வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்தை வெளிப்படுத்தினார்.
கோவை அனுப்பர்பாளையத் தில் பள்ளி கல்வித்துறை சார்பில் ரூ.300 கோடி மதிப்பீட்டில், 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 8 தளங்களுடன் கட்டப்படவுள்ள நூல கம் மற்றும் அறிவியல் மையத்திற் கான அடிக்கல் நாட்டு விழா புதனன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்வில் சிறப்புரையாற்றி முதலமைச்சர் பேசியதாவது:
கோவையில்தான் தமிழ் புதல்வன் திட்டம் துவங்கப்பட்டது.ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு செய்யும் பணிகளை கோவை யில் இருந்து துவங்கியுள்ளேன். கோவை மாவட்ட மக்களின் கோரிக்கைகளை கேட்டுள்ளோம். கோவையில் நூலகத்துடன் சேர்ந்து அறிவியல் மையம் அமைய வேண்டும் என்ற கோரிக்கை வந்தது. சென்னையில் அண்ணா நூலகம், மதுரை கலைஞர் நூலகம் உள்ளது போல கோவையில் இந்த பெரியார் நூலகம் உருவாகவுள்ளது. இதன் திறப்பு விழா ஜனவரி 2026ம் ஆண்டு நடைபெறும். செவ்வாயன்று எல்காட் நிறுவனத்தின் புதிய தகவல் தொழில்நுட்ப கட்டடம் திறக்கப்பட்டுள்ளது. செம்மொழி பூங்கா பணிகளை ஆய்வு செய்தேன். அதுவும் விரைந்து முடிக்கப்பட்டு ஜூன் மாதம் திறக்கப்படும். கோவை யில் 35 ஆண்டு கால பிரச்சனையாக இருந்த நில விடுவிப்பு கோரிக்கை தீர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 10 ஆயிரம் குடும்பங்கள் பயன டைந்துள்ளன. தங்க நகை தொழி லாளர்கள் குறைகளை கேட்டறிந்து நேரடியாக அவர்களின் இடத்திற்கு சென்றேன். உலக அளவில் முக்கிய தங்க நகை மையமாக விளங்கும் கோவையில் தொழில் பூங்கா அமைக்கப்படும். அதில் ஆய்வக மும் அமையவுள்ளது. இதனால், அதிக வேலைவாய்ப்பு உருவாகும். விமான நிலைய விரிவாக்கம், சூலூரில் தொழில் மையம் மற்றும் கோவையின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் விதமாக மேற்கு புறவழிச்சாலை, குடிநீர் திட்டங்கள், பாதாள சாக்கடை திட்டங்கள் ஆகி யவை சிறப்பாக செயல்படுத்தப் பட்டு வருகின்றன.
நாடாளுமன்ற தேர்தலில் அறி வித்த வாக்குறுதிகளில் முக்கிய மான கிரிக்கெட் ஸ்டேடியம் இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் துவங்கவுள்ளது. இந்தியாவின் தகவல் தொழில் நுட்ப மையமாக கோவை உள்ளது. கோவை எல்காட் வளாகத்தில் 17.17 ஏக்கர் பரப்பள வில் மேலும் ஒரு ஐடி பூங்கா அமைக்கப்படும். இதனால் 31 ஆயி ரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். சின்னியம்பாளையம் முதல் நீலாம்பூர் வரை 5 கி.மீ தூரத்திற்கு உயர்மட்ட மேம்பால சாலை விரிவாக்கப்படும். தொண்டா முத்தூரில் யானை புகாத வகை யில் நவீன பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படும். ஆனைமலை கூட்டு குடிநீர் திட்டம் மேம்படுத்தப் படும். 295 பொள்ளாச்சி கிராமங்களுக் காக கூட்டுக் குடிநீர் திட்டம் மேம்படுத்தப்படும்.
கோவை மாநகரில் புனரமைக் கப்படாத சாலைகள், பாதாளச் சாக்கடையால் பாதிப்படைந்த சாலைகள், மண் சாலைகள் ஆகிய வற்றை மேம்படுத்த ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ள ப்படும். இவ்வாறு, மக்களுக்கான பணிகள் தொடர்ந்து செய்யப்பட்டு, தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து, சிறந்த மாநில மாக உள்ளது. இப்போது, தெற்கு தான் வடக்கிற்கும் வாரி வழங்கு கிறது.
இவ்வாறு முதல்வர் பேசினார். இந்நிகழ்வில், நகராட்சி நிர்வா கத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மின்சாரத்துறை செந்தில் பாலாஜி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமை செய லாளர் முருகானந்தம், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மற்றும் அரசு உயர் அலு வலர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.