tamilnadu

img

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சேலம் வழியாக மும்பைக்கு சிறப்பு ரயில்

சேலம், ஏப்.25- கோடை விடுமுறையையொட்டி, மும்பையிலிருந்து சேலம், நாமக்கல் வழியாக கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் நிர் வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோடைகால விடு முறையையொட்டி, முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருவதால், சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்து வருகிறது. அந்த வகையில், மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, மும்பை - கன்னியாகுமரி சிறப்பு ரயில் மே 7 ஆம் தேதி முதல் ஜூன் 25 ஆம் தேதி வரை புதன்கிழமைதோறும் இயக்கப்பட வுள்ளது. மும்பையிலிருந்து அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட்டு தாதர், புனே, சோலாப்பூர், பங்கோருப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் மதுரை, திருநெல் வேலி வழியாக கன்னியாகுமரிக்கு வியாழனன்று மதியம் 1.15 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில், கன்னியா குமரி - மும்பை சிறப்பு ரயில் மே 8 ஆம் தேதி முதல் ஜூன் 26 ஆம் தேதி வரை வியாழக்கிழமைதோறும் இயக்கப்பட வுள்ளது. கன்னியாகுமரியில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு  திருநெல்வேலி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக் கல், கரூர், நாமக்கல், சேலம் வழியாக மும்பைக்கு சனிக் கிழமை அதிகாலை 4.15 மணிக்கு சென்றடையும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழிப்பாதை ஏற்படுத்தித்தரக்கோரி குடும்பத்துடன் விவசாயி தர்ணா

தருமபுரி, ஏப்.25- தனது நிலத்திற்கு செல்ல வழிப்பாதை ஏற்படுத்தித்தர வேண்டும், என வலியுறுத்தி விவசாயி தனது குடும்பத்து டன் தர்ணாவில் ஈடுபட்டார். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, பே. தாதம்பட்டியை அடுத்த டி.புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவ சாயி சுந்தரேசன். அவரது மனைவி, மகன்கள் உள்ளிட்ட குடும்பத்தினருடன் அவர், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலு வலகத்திற்கு வியாழனன்று வந்தார். அப்போது, அவர் ஆட்சியரின் கார் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட் டார். அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், பேச்சு வார்த்தை நடத்தி ஆட்சியரை சந்தித்து புகாரளிக்க ஏற்பாடு செய்தனர். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, எங்க ளது நிலத்திற்கு போதிய வழிப்பாதை இல்லாத காரணத்தி னால், அருகிலுள்ள நிலத்துக்காரர்களிடம் பேசி பொது  வழிப்பாதையை பயன்படுத்தி கொள்ள, கடந்த 1977 ஆம்  ஆண்டு ஒரு ஒப்பந்த பத்திரத்தை எழுதி, இதுநாள் வரை  அந்த வழிப்பாதையை பயன்படுத்தி வந்தோம். இந்நிலை யில், அந்த ஒப்பந்தத்தை மீறி பக்கத்து நிலத்துக்காரர்களின் மகன்கள் தற்போது, இந்த வழிப்பாதை வழியாக எங்களது நிலத்துக்கு செல்லக்கூடாது என்று தகராறு செய்து வரு கின்றனர். மேலும், வழிப்பாதையை பயன்படுத்த வேண்டும்  என்றால், 48 சென்ட் நிலம் கிரயம் செய்து கொடுங்கள் என்றும் மிரட்டுகிறார்கள். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகா ரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்க ளது உறவினர் ஒருவர் காவல்துறையில் இருப்பதாகக்கூறி, கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே, ஒப்பந் தத்தின்படி எங்களது நிலத்திற்கு செல்ல வழிப்பாதை ஏற் படுத்தித்தர வேண்டும். கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைகேடு புகார்: துணைவேந்தர் ஆஜர்

சேலம், ஏப்.25- முறைகேடு புகார் தொடர்பான விசாரணைக்காக, சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், காவல் ஆணையர் அலுவலகத்தில் வெள்ளியன்று ஆஜரா னார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ‘பூட்டர்’ என்ற தனியார் அமைப்பை தொடங்கி, அதன் மூலம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக பல்கலைக்கழகத் துணை வேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் தங்கவேலு உள் ளிட்ட நான்கு பேர் மீது புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில், சேலம் மாநகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர். இந்த வழக் கில் ஜெகநாதன் நிபந்தனை ஜாமீன் பெற்றதோடு, வழக்கு விசாரணைக்கு தடையாணையும் பெற்றிருந்தார். இதனை எதிர்த்து மாநகர காவல் துறையினர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததை தொடர்ந்து, வழக்கு விசார ணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியதோடு, காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ளலாம் என்றும், விரை வில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை மீண்டும் தொடங் கிய மாநகர காவல் துறை உதவி ஆணையாளர் ரமணி ரமா லட்சுமி, இந்த வழக்கு தொடர்புடைய சாட்சிகளிடம் தனித்தனி யாக சம்மன் அனுப்பி சாட்சிகளின் கருத்துகளை பதிவு செய் துள்ளார். இந்நிலையில், இந்த முறைகேடு வழக்கு தொடர்பாக பல் கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனிடம் விசாரணை மேற்கொள்வதற்காக உதவி ஆணையர், துணைவேந்தர் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினார். இதையடுத்து துணைவேந்தர் ஜெகநாதன் வெள்ளியன்று சூரமங்கலம் காவல் நிலைய வளாகத்திலுள்ள உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகினார். அவரிடம் வழக்கு தொடர்பான பல்வேறு கருத்துக்களை கேட்டறிந்து, போலீசார் அதனை வீடியோவில் பதிவு செய்தனர்.