கோவை - திண்டுக்கல் இடையே இன்று முதல் நவம்பர் 6 ஆம் தேதி வரை மெமு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
கோவை சந்திப்பிலிருந்து 06106 என்ற எண் கொண்ட மெமு ரயில் காலை 9:35 மணிக்கு புறப்பட்டு பழனிக்கு 12.05 மணிக்கும், திண்டுக்கல்லுக்கு 1.10 மணிக்கும் சென்றடையும்.
திண்டுக்கல்லில் இருந்து 06107 என்ற எண் கொண்ட ரயில் பகல் 2 மணிக்கு புறப்படுகிறது. பழனிக்கு 2.55 மணிக்கு வந்தடைகிறது. பின்னர் மாலை 5.30 மணிக்கு கோவை வந்தடைகிறது.
இந்த ரயில்களில் 8 பெட்டிகளுடன் ஒரு பயணத்திற்கு 2,400 பயணிகள் பயணம் செய்யலாம் மற்றும் பயண சீட்டுகளை யு.டி.எஸ் செயலியில் பதிவு செய்யலாம், பயணிகள் மொபைல் அப்ளிகேஷன் மூலம் காகிதம் இல்லா பயண சீட்டை முன்பதிவு செய்யலாம் என தென்னக ரயில்வே, சேலம் கோட்டம் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.