காவல்துறையின் அறிவுரைகளை மீறிச் செயல்படும் மதுபானக்கூடங்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை.
கோவையுள்ள தனியார் மஹ்டுபானக்கூடங்களுக்கு மது அருந்த வருபவர்கள் சொந்த வாகனங்களில் வந்தால் டிரைவருடன் வருகிறார்களா? வேறு ஏதேனும் போதைப் பொருள் பயன்படுத்துகிறார்களா? மது அருந்துவதற்கான தகுந்த வயது உடையவரா என கண்காணிக்க வேண்டும் என மதுபானக்கூடங்களுக்கு காவல்துறை விதிமுறைகள் விதித்துள்ளது.
மேலே கூறியுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளச் சம்மந்தப்பட்ட மதுபானக்கூட நிர்வாகம் தவறி அதன் மூலமாக ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட மதுபானம்கூட நிர்வாகத்தின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுபானக்கூட உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது மோட்டார் வாகனச் சட்டப்பிரிவு 185ன் படி தண்டிக்கத்தக்க குற்றமாகும் என்பதை வாகன ஓட்டிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் இயக்கியமைக்காக முதல் முறையாக வழக்கு பதிவு செய்யப்படுவோர் மீது ரூ.10,000 வரை அபராதம் அல்லது 6 மாதம் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக விதிப்பதற்குச் சட்டத்தில் இடம் உள்ளது. இதே தவறை இரண்டாவது முறையாக செய்வோர் மீது ரூ.15,000 வரை அபராதம் அல்லது 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிப்பதற்குச் சட்டத்தில் இடம் உள்ளது. மேலும், இக்குற்றத்தில் வழக்கு பதிவு செய்யப்படுபவரது வாகனத்தை முடக்குவதற்கும், அவரது வாகன ஓட்டுநர் உரிமத்தைத் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்வதற்கும் மோட்டார் வாகன சட்டத்தில் வழிவகை உள்ளது என்பதை வாகன ஓட்டுநர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே மது அருந்திவிட்டு மோட்டார் வாகனத்தை அறவே இயக்கக்கூடாது என்று காவல்துறையின் சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.