கோவை,மார்ச்.27- கோவை 65 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டம் குலுபா கிராமத்தைச் சேர்ந்த சமீர் மாலிக் (23) கடந்த ஒரு ஆண்டாக கோவை கோவில்பாளையத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தடைந்துள்ளார். மதுபோதையிலிருந்த சலீம், தூங்கிக் கொண்டிருந்த 65 மூதாட்டியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்து தாக்கினார்.
மூதாட்டியின் சத்தம் கேட்டு அங்கு வந்த உள்ளூர் மக்கள் உடனடியாக கோவில்பாளையம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர். பாலியல் வன்கொடுமையை எதிர்த்து அவர் போராடியதில் உடலில் காயங்கள் ஏற்பட்டிருந்தன. உடனடியாக அவர் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (CMCH) சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்
விசாரணையில், குற்றத்தை ஒப்புக்கொண்ட சமீர் மாலிக் போலீசார் அவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.