tamilnadu

img

பெருமுதலாளிகளுக்கு சாதகமாக செயல்படும் மோடி அரசு.... கோவை தொழில்முனைவோர் கூட்டத்தில் ராகுல்காந்தி சாடல்....

கோவை:
சிறு குறு நிறுவனங்களை பாதிப்புக்குள்ளாக்கிவிட்டு, பெருமுதலாளிகளுக்கு சாதகமாக மத்திய மோடி அரசு செயல்படுவதாக கோவையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி எம்.பி.,கோவையில் சனியன்று சிறு குறு தொழில் முனைவோரை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், “தொழில்துறையில் ஜிஎஸ்டி முக்கிய பங்கு வகிக்கின்றது என்றாலும் பெரிய தொழில் நிறுவனங்கள், சிறு குறு தொழில் நிறுவனங்கள் ஜிஎஸ்டியால் பாதிக்கப்படுகின்றன. மோடி அரசு கொண்டுவந்துள்ள இந்த ஜிஎஸ்டி-யை மாற்றி அமைத்து வரி குறைப்பு செய்ய வேண்டும்.வட்டி குறைப்பை அமல்படுத்த சரியான திட்டம் எங்களிடம் இருக்கின்றன. மக்களை புரிந்து கொண்டு அரசு செயல்பட வேண்டும். ஆனால், பாஜகவினர் இதனை புரிந்து கொள்ள மாட்டார்கள்.

இதேபோல், வங்கி நடைமுறைகள் பெரும் முதலாளிகளுக்கு சாதகமாகவே அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அரசின் பொருளாதார நடவடிக்கைகள் சிறுகுறு தொழில் நிறுவனங்களை கடுமையாக பாதிக் கின்றது. பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் நாடுகள் சிறு குறு தொழில் முனைவோரை பாதுகாக்க நல்லபொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டுள் ளன. பாஜக அரசோ நம் நாட்டின் சிறு குறு நிறுவனங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை.

இந்தியாவில் பெட்ரோல் விலை ஏறிக்கொண்டு போகின்றது. இது தொழிலாளர்களை பெரிதளவில் பாதிக்கின்றது. நாம் பொருளாதார ரீதியாக சிறு குறு தொழிலை வைத்து சீனாவை மிஞ்ச முடியும், நமது கல்வி முறையில் தொழில் துறை முன் னேற்றம் சார்ந்து எதுவும் இல்லை. அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளாமல், வரி உள்ளிட்ட சலுகைகளால், உங்கள் கைகளை கட்டி வைத்துள்ளனர். அதைத் தகர்த்தால் சிறு குறு தொழில்கள் வெற்றி பெற முடியும். கூட்டத்தில் நீங்கள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவேன். இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.

விவசாயிகளை வேலைக்காரர்களாக மாற்றும் மோடி
முன்னதாக, கோவை சித்ரா பகுதியில் காங்கிரஸ்கட்சியினர் அளித்த வரவேற்பை ஏற்று தொண்டர்கள்மத்தியில் ராகுல்காந்தி பேசுகையில், “இந்தியாவில் பல்வேறு விதமான கலாச்சாரம் மற்றும் கொடிகள் இருக்கின்றன. பல்வேறு விதமான வாழ்க்கை முறை இருக்கிறது. ஆனால், மோடி தமிழக மக்களை இரண்டாம் தர குடிமக்களாக கருதுகிறார். தமிழகம் எல்லாமாநிலத்திற்கும் முன்னோடியாக உள்ளது. ஆனால்,இங்கு இருக்கும் செல்வங்களை விற்றுக் கொண்டுள் ளார் மோடி. தமிழகம் எல்லாவற்றையும் இழந்து கொண்டுள்ளது. தமிழக விவசாயிகள் சிரமப்பட்டு கொண்டுள்ளனர். 

மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்துமோடி, விவசாயிகளின் உரிமைகளை பறிக்கமுயல்கிறார். இந்தியாவின் மாபெரும் விவசாயிகளை,இந்தியாவில் உள்ள பெரும் தொழில் அதிபர்களுக்கு வேலைகாரர்களாக மாற்ற முயற்சிக்கிறார் மோடி. அதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். கடந்த காலங்களில் தமிழகம் தான் தொழில் துறையில் சிறந்து விளங்கியது. தமிழக மக்களிடம் இருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளமாக இருக்கிறது. துரதிஷ்டவசமாக தற்போது தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமலும், மறுபுறம் விவசாயிகளும் சிரமப்பட்டு வருகின்றனர். நீங்கள் விரும்புகின்ற அரசை தரத்தான் நான் இங்கு வந்து கொண்டு இருக்கிறேன். தமிழக மக்களோடு என்னுடைய உறவு அரசியல் உறவல்ல. எனக்கு தமிழக மக்களோடு குடும்ப உறவுஇருக்கிறது” என்றார்.இந்நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், மயூராஜெயக்குமார், கார்த்திக் சிதம்பரம் எம்.பி., செல்லக் குமார், கோபண்ணா, கே.ஆர்.ராமசாமி எம்எல்ஏ, விஷ்ணு பிரசாத் எம்பி, ஜோதிமணி எம்.பி., சிவந்தி ஆதித்தன் உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர்.