பல்லடம் நகரில் செங்கொடி இயக்கத்தில் இணைந்த பட்டியலின மக்கள்
பல்லடம் நகராட்சி கல்லம்பாளை யம் பகுதியில் பட்டியலின மக்கள் செங்கொடி இயக்கத்தில் ஆர்வத்து டன் இணைந்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் நக ராட்சியில் கல்லம்பாளையம் பகுதி யில் உள்ள பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தோர் சாதிய வன்கொடுமையை சந்தித்தபோது தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் செங்கொடி இயக்கத்தினர் அவர்களுக்கு ஆதர வாக தலையிட்டனர். எனவே சாதிய வன்கொடுமையில் இருந்து பாது காக்க செங்கொடி இயக்கமே தீர்வு என அங்குள்ள மக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து ஞாயிறன்று தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநில செயலாளர் சி.கே.கனக ராஜ் தலைமையில் நடைபெற்ற கூட் டத்தில், கல்லம்பாளையம் பட்டிய லின சமூக மக்கள் 30க்கும் மேற்பட் டோர் நிர்வாகிகளுக்குத் துண்டணி வித்து தங்களை செங்கொடி இயக் கத்தில் இணைத்துக் கொண்டனர். மேலும் அந்த மக்களை இயக்கத் தில் வரவேற்று அனைவருக்கும் சிவப்புத் துண்டு அணிவிக்கப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.அருள், மாவட்ட துணைச்செயலாளர் க.நிரு பன் சக்கரவர்த்தி, பல்லடம் ஒன்றிய செயலாளர் சி.முருகேசன், ஒன்றி யத் தலைவர் ச.நாகேந்திரன், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பிரவீன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு அவர்களை வரவேற்று வாழ்த்திப் பேசினர்.