கோவை
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மாநிலத்தின் பெரிய நகரங்களில் ஒன்றான கோவையில் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு விகிதம் ஜெட் வேகத்தில் உள்ளது. இதுவரை அங்கு 4,821 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 54 பேர் பலியாகியுள்ளனர். 3,209 பேர் குணமடைந்துள்ளனர். இன்னும் 1,738 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில் கோவை அரசு மருத்துவ கல்லூரியில் நரம்பியல் பேராசிரியராக பணியாற்றும் பிரனேஷ் என்ற மருத்துவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதற்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (சனிக்கிழமை) அவர் உயிரிழந்தார். மருத்துவ கல்லூரியில் முக்கிய நபர் ஒருவர் கொரோனாவால் பலியாகியது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.