tamilnadu

img

முதல்வரின் வாக்குறுதியை நிறைவேற்ற தடையாக வனத்துறை

முதல்வரின் வாக்குறுதியை நிறைவேற்ற தடையாக வனத்துறை

சிபிஎம் ஆர்ப்பாட்டம்

உதகை, மே 17 – நீலகிரி மாவட்டம், கூடலூர் வட் டம், புளியம்பாறை கிராமத்தில் உள்ள ஆமைக்குளம் கல்லூரிக் குச் செல்லும் பாதையில் நாரங்காக டவு ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வனத்துறை அனுமதி மறுப்பதாகக் கூறி, மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியினர் ஆமைக்குளம்  பகுதியில் சனியன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புளியம்பாறை கிராமத்திலி ருந்து ஆமைக்குளம் கல்லூரிக்குச் செல்லும் பாதையில் உள்ள நாரங்காகடவு ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என் பது அப்பகுதி மக்களின் நீண்ட  நாள் கோரிக்கை. மழைக்காலங்க ளில் மாணவர்கள் ஆற்றைக் கடந்து செல்வதில் பெரும் சிரமம் ஏற் படுவதோடு, அண்மையில் கல்லூரி மாணவி ஒருவர் ஆற்றில் மூழ்கி  உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்துள் ளது. கடந்த 2021ஆம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மேட்டுப்பாளையம் வந்தி ருந்த முதலமைச்சர், மாணவி தமிழ ரசி என்பவரின் வேண்டுகோள் மனுவை பெற்றுக்கொண்டு, 100  நாட்களுக்குள் பாலம் கட்டித் தரு வதாக முதலமைச்சர் உறுதியளித் தார். அதன்படி, எஸ்ஏடிபி திட்டத் தின் கீழ் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீ டும் செய்யப்பட்டது. ஆனால், வனத்துறை தடையில்லா சான்று வழங்காமல், வெறும் ரூ.18 லட்சத் தில் 4 அடி அகலமுள்ள இரும்பு நடைபாலம் அமைக்க முயற்சி செய்து வருகிறது. இது, அவசர கால ஊர்திகள் செல்ல முடியாத வகையில் உள்ளது. முதல்வரின் வாக்குறுதிக்கு மாறாக, வனத்துறை செயல்படு வதைக் கண்டித்து, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியினர் புளியம் பாறை அருகே ஆமைக்குளம் பகுதி யில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  புளியம்பாறை கிளைச் செயலாளர் சுபைர் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். இதில், மூத்த தலைவர் என். வாசு, மாவட்டக் குழு உறுப்பினர் ராசி ரவிக்குமார், விவசாயத் தொழிலாளர் சங்க  மாவட்டச் செயலாளர் பன்னீர்செல் வம் உள்ளிட்டோர் கண்டன உரை யாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஏரியா  கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். முடிவில், இந்திய ஜனநாயக வாலி பர் சங்க ஏரியா கமிட்டி உறுப்பி னர் ரஜிதா மணிகண்டன் நன்றி கூறி னார்.