tamilnadu

img

137 ஆவது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம்

137 ஆவது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டம்''சேலம், அக்.31- அரசிராமணி பேரூராட்சிக்குட் பட்ட குறுக்குப்பாறையூரில், விவ சாயத்தையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கும் வகையில் குப்பை களைக் கொட்டுவதைக் கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார் பில் 137 நாட்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டம், சங்ககிரி வட் டம், அரசிராமணி பேரூராட்சிக்குச் சொந்தமான குப்பைகளை திடக் கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் செயல்படுத்த இந்த இடத்தை தேர்வு செய்த நாள் முதலே இப் பகுதி விவசாயிகளும் பொதுமக்க ளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற னர். யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் இத்திட்டத்தை அமல்ப டுத்த, இதே பேரூராட்சியில் உள்ள  19 அரசு புறம்போக்கு நிலங்களில் ஒன்றைத் தேர்வு செய்யுமாறு வலி யுறுத்தியும், உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு முதல் உள் ளூர் அதிகாரிகள் வரை பலரையும் சந்தித்து ஆட்சேபனை தெரிவித் தும் பயனில்லை. நீதிமன்றங்களி லும் வழக்கு நிலுவையிலுள்ளது. இத்தனை எதிர்ப்பையும் மீறி, திடக்கழிவு மேலாண்மை திட்டத் திற்கான கட்டடங்கள், சுற்றுசுவர் கள் அமைக்கும் பணி நிறைவுற்று, குப்பைகளுடன் திறப்பு விழாவிற்கு பேருராட்சி தலைவர் தலைமை யில், சில கவுன்சிலர்களும், பேரூ ராட்சி செயலாட்சியரும் வந்திருந்த னர்.  காலை 7 மணியில் இருந்தே  சங்ககிரி காவல் துணை கண்கா ணிப்பாளர் தலைமையில் போலீ சார்கள் குறுக்குப்பாறையூரில் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், குப்பைகள் கொட்டப்பட்டு, பேரூ ராட்சித் தலைவர் தலைமையில் திறப்பு விழா நடத்த முயன்றனர்.  இதனை எதிர்த்து விவசாயிகள்  சங்கம் சார்பில் வெள்ளியன்று  மறியல் போராட்டம் நடத்தப்பட் டது. போராட்டக்காரர்களை காவல் துறை கைது செய்து திருமண மண் டபத்தில் அடைத்தனர். இப்போராட்டத்தில், விவசா யத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவரும், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் கு.சின்ன துரை, சிபிஎம் மாநிலச் செயற்குழு  உறுப்பினர் செ.முத்துக்கண்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாவட் டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி உட் பட பலர் பங்கேற்றனர். விவசா யிகள் விரோத செயலைக் கண்டிப் பதாகவும், மாற்று இடத்தில் இத் திட்டத்தைச் செயல்படுத்த வேண் டும் என்றும் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.